Published:Updated:

மின் கட்டண உயர்வு: `ஷாக்’ கொடுத்துவிட்டது அரசு! - அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பும் கோரிக்கையும்!

‘ஷாக்’ கொடுக்கும் மின் கட்டண உயர்வு

``எங்கள் ஆட்சியில், மின்கட்டணக் கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடியால் பலருக்கும் கட்டணம் அதிகம் காண்பித்தது. அதைக் கண்டித்து அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். உடனே நாங்கள் தலையிட்டு குளறுபடியை சரிசெய்தோம்.” - தங்கமணி

மின் கட்டண உயர்வு: `ஷாக்’ கொடுத்துவிட்டது அரசு! - அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பும் கோரிக்கையும்!

``எங்கள் ஆட்சியில், மின்கட்டணக் கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடியால் பலருக்கும் கட்டணம் அதிகம் காண்பித்தது. அதைக் கண்டித்து அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். உடனே நாங்கள் தலையிட்டு குளறுபடியை சரிசெய்தோம்.” - தங்கமணி

Published:Updated:
‘ஷாக்’ கொடுக்கும் மின் கட்டண உயர்வு

“தமிழக மக்கள் நலனுக்காகப் பகலிரவு பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம். தி.மு.க மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்தார்கள். அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம்..”

- கடந்த 8-ம் தேதி அமைச்சர் மூர்த்தியின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரைதான் இது.

அவர் அப்படிப் பேசிய 48 மணிநேரத்திற்குள் மின்கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு ‘ஷாக்’ கொடுத்துள்ளது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம். தமிழ்நாடு மின்வாரியம், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடனில் தத்தளிப்பதால், கடனை சமாளிக்கும் பொருட்டு, மின் கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை எடுத்துவந்தது.

மின் மீட்டர்
மின் மீட்டர்

இதற்காக, மின் பயன்பாடு, புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தித் தரக் கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18-ம் தேதி மின்வாரியம் அறிக்கை சமர்ப்பித்தது. மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெற்றன.இந்தக் கூட்டங்களில், சுமார் 4,500-க்கும் மேற்பட்டோர் கட்டண உயர்வுக்கு எதிராக மனுக்கள் அளித்திருந்த நிலையில், மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. செப்டம்பர் 10-ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கும் வந்துவிட்டது. இவ்வளவு வேகமாக மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்காத மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

 தங்கமணி
தங்கமணி

இதுகுறித்து முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் பேசினோம். “தி.மு.க அரசு தனது பட்ஜெட்டில் மின்சார வாரியத்துக்கு ஏற்பட்டுள்ள 13,000 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. பட்ஜெட்டில் கூறியவாறு நஷ்டத்தொகையை ஏற்றிருந்தால் இந்த மின்கட்டண உயர்வு இருந்திருக்காது. இதன் மூலம் அவர்கள் கூறியது பொய் என்பது நிரூபணமாகிறது. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எங்கள் ஆட்சியில், மின்கட்டணக் கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடியால் பலருக்கும் கட்டணம் அதிகம் காண்பித்தது. அதைக் கண்டித்து அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். உடனே நாங்கள் தலையிட்டு குளறுபடியை சரிசெய்தோம். ஆனால், இப்போது மின்கட்டணத்தை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளார்கள். வாக்களித்த மக்கள் ஏன் வாக்களித்தோம் என்று நினைக்கும் அளவிற்கு தி.மு.க அரசின் செயல்பாடுகள் இருக்கிறது. இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்” என்றார்.

செந்தில்
செந்தில்

பா.ம.க முன்னாள் எம்.பி செந்தில் நம்மிடம் பேசுகையில், “அரசின் நிர்வாக தோல்விதான் இந்த மின்கட்டண உயர்வுக்குக் காரணம். மாதந்தோறும் கட்டணம் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், அதை நிறைவேற்றாமல் மின்கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்தும் அநீதியைச் செய்திருக்கிறார்கள். இதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

ஜேம்ஸ்
ஜேம்ஸ்

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத் தலைவர் ஜேம்ஸ், “மின்கட்டண உயர்வு தொடர்பாக, கோவையில் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்திய போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இது சாதாரண மின்கட்டண உயர்வு கிடையாது. தொழில் நிறுவனங்கள் ஆயிரம் யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பார்கள்.

மின்வாரியம்
மின்வாரியம்

இரண்டு மாதத்துக்கு ஒருமுறை 3,500 ரூபாய் வரை மின்கட்டணம் செலுத்திவரும் நாங்கள், இனி 8,000 ரூபாய் வரை மின்கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்தக் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் கோவை, திருப்பூரில் செயல்படும் பெரும்பாலான சிறு, குறு தொழில் நிறுவனங்களை மூடும் நிலை ஏற்படும்” என்றார்.

மின்கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், “மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் உத்தரவுப்படி மின் கட்டணத் திருத்தம் என்பது மத்திய அரசின் திட்டங்களின் கீழ் நிதி பெறுவதற்கான கட்டாய முன் நிபந்தனையாகும். ரிசர்வ் வங்கியும், மத்திய நிதி நிறுவனங்களும் ஆண்டுதோறும் மின் கட்டணத்தில் திருத்தம் செய்ய முன் உறுதியளித்த நிபந்தனை விதித்துள்ளன. சி.இ.ஆர்.சி, ஏ.பி.டி.இ.எல் போன்ற பல சட்ட அமைப்புகள் மின் கட்டணம் திருத்தம் செய்யாததற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. எனவே, மின் கட்டணத்தை 8 வருட இடைவெளிக்குப் பிறகு உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை” எனக் கூறியுள்ளது.

முத்தரசன்
முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், “மின் விநியோகக் கட்டணத்தை 32% முதல் 53% வரை கடுமையாக உயர்த்தியிருப்பதன் மூலம், மின் நுகர்வோர் தலையில் கடுமையான செலவுச் சுமை ஏற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசையும், 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாததையும் காரணம் காட்டி கட்டண உயர்வை நியாயப்படுத்த முயற்சி செய்வது சரியல்ல. தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் மின்சாரம் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள் வாரியத்துக்கு ஏற்படுத்தும் பெருநஷ்டத்தை மூடிமறைப்பது ஏன்? என்ற வினாவுக்கும் ஏற்கத்தக்க விளக்கம் இல்லை. எனவே, மின்கட்டணத்தை வெகுவாக குறைத்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். மேலும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கட்டண உயர்வை கண்டித்து போராட்டமும் அறித்திருக்கிறார்கள். அரசின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!