Published:Updated:

"தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆவணப்படுத்துங்கள்!" - பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் உத்தரவு

ஆளுநர் ஆர்.என்.ரவி

வரலாற்றில் நினைவுகூரப்படாத தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆவணப்படுத்துமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வேந்தர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

Published:Updated:

"தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆவணப்படுத்துங்கள்!" - பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் உத்தரவு

வரலாற்றில் நினைவுகூரப்படாத தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆவணப்படுத்துமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வேந்தர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

`அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கண்டறிந்து, அவர்கள் குறித்த தகவல்களை ஆவணப்படுத்த வேண்டும்' என தமிழ்நாடு ஆளுநர் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ``இந்திய விடுதலைக்குப் பாடுபட்டு அங்கீகாரம் பெறாமல்போன தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காணும் முயற்சியில், தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் ஈடுபட வேண்டும் என்று சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டிருந்தார்.

`ஆளுநர் ரவி
`ஆளுநர் ரவி
ட்விட்டர்

இந்த நிலையில், வரலாற்றில் நினைவுகூரப்படாத தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அவர்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும்படி பல்கலைக்கழகங்களுக்கு அவற்றின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார். இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ரவி எழுதியிருக்கும் கடிதத்தில், `நாடு விடுதலை அடைந்ததன் மிகப்பெரும் கொண்டாட்டத்தை மக்களுடன் கொண்டாடுகிறோம். நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன.

நமது சுதந்திரப் போராட்டத்தின் பெருமைமிகு வரலாறு, கலாசாரம் மற்றும் இந்தியாவின் சாதனையைச் சொல்கிறது. நீண்ட சுதந்திரப் போராட்டக் களத்தில் முன்னணி வீரர்கள் தவிர பல வீரர்கள், வீராங்கனைகள் பற்றிய வரலாறு அறியப்படாமலேயே போனது. அவர்களைக் கௌரவப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் கடமையும் நம் முன் இருக்கிறது. மேலும், நமது நாட்டில் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் அந்நியரை மண்ணைவிட்டு விரட்ட, செயற்கரிய தியாகங்களைச் செய்திருக்கின்றனர். இதில் பலரின் தியாகங்கள், பங்களிப்புகள் பொதுவெளியில் அறியப்படாமலே மறக்கடிக்கப்பட்டிருக்கின்றன.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி
ட்விட்டர்

ஒரு தேசம் அதற்காக உழைத்தவர்களின் தியாகத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. நாட்டுக்காக அவர்கள்செய்த தியாகங்கள் மற்றும் போராட்டங்களை எதிர்கால தலைமுறை அறிய வேண்டும். இதனால் அவர்களைப் பற்றியத் தகவல்களை ஆவணப்படுத்துவது நம் கடமை. இது சம்பந்தமாக உங்கள் பல்கலைக்கழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை அடையாளம் கண்டு, ஆவணப்படுத்த குறைந்தபட்சம் ஐந்து சிறப்பு ஆராய்ச்சி மாணவர்களை நீங்கள் நியமிக்க வேண்டும்.

பொருத்தமான ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்தது ஓர் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரரை அடையாளம் கண்டு அவர் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த ஆராய்ச்சி திட்டத்துக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை முடிக்க ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படலாம். அதன் முடிவில் ராஜ் பவனில் நடைபெறும் விழாவில் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து ஆராய்ச்சி மாணவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி
ட்விட்டர்

இது வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த வீரர்களுக்கு நாம் அளிக்கும் புகழஞ்சலியாகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெருமையாகவும் இருக்கும். இந்த ஆராய்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிலை குறித்து அவ்வப்போது எனக்கு விளக்கமளிக்க வேண்டும்' என ஆளுநர் கடிதத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.