Published:Updated:

"துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவில் சட்ட சிக்கல்கள் உள்ளன!"- ஆளுநர் ரவி கூறியதாக தகவல்

ஆளுநர் ரவி

ஆளுநர் ஆர்.என் ரவி ஆளுநர் மாளிகையில் நேற்று மூத்த பத்திரிகையாளர்களைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துக் கலந்துரையாடியிருக்கிறார்.

"துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவில் சட்ட சிக்கல்கள் உள்ளன!"- ஆளுநர் ரவி கூறியதாக தகவல்

ஆளுநர் ஆர்.என் ரவி ஆளுநர் மாளிகையில் நேற்று மூத்த பத்திரிகையாளர்களைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துக் கலந்துரையாடியிருக்கிறார்.

Published:Updated:
ஆளுநர் ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ஆளுநர் மாளிகையில் நேற்று மூத்த பத்திரிகையாளர்களைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துக் கலந்துரையாடியிருக்கிறார். இந்த நிகழ்வில் அவர் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்.

இந்தச் சந்திப்பின்போது ஆளுநர் ரவி, ``தமிழ்நாடு முற்போக்கான மாநிலமாகத் திகழ்கிறது. மனிதவள மேம்பாடு, உட்கட்டமைப்பு போன்றவற்றில் முன்னிலை வகிக்கிறது.

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்நாடு அரசுடன் எந்த பிரச்னையும் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர், சிறந்த மனிதர் முதல்வர் ஸ்டாலின். அவரையும், அமைச்சர்களையும் நண்பர்களாகக் கருதுகிறேன். மக்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு நானே முதல்வருக்குக் கடிதம் எழுதுவேன்" எனப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், ``முதல்வரைப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடம் இல்லை. ஆளுநருக்குப் பதிலாக முதல்வரை வேந்தராக நியமிக்கும் மசோதா, பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம் 1956-க்கு முரணாக இருக்கிறது. மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். அதேபோல துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலான சட்ட மசோதாவில் சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன.

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி

மசோதாவில் திருத்தமில்லாது மீண்டும் வந்தால், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது கடினம். சட்ட நிபுணர்களின் இறுதிக் கருத்துக்காகக் காத்திருக்கிறேன். அரசியலமைப்புக்கு உட்பட்டுத்தான் என்னுடைய கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றேன். சனாதன தர்மத்தை ஆதரித்துப் பேசுவதால் நான் குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்துக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்பது தவறு" என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.