Published:Updated:

7-ம் தேதி டெல்லி விரைகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆளுநர் ஆர்.என்.ரவி

பிப்ரவரி 7-ம் தேதி தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, 9-ம் தேதி வரை அங்கிருப்பார் என்று கூறப்படுகிறது.

7-ம் தேதி டெல்லி விரைகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

பிப்ரவரி 7-ம் தேதி தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, 9-ம் தேதி வரை அங்கிருப்பார் என்று கூறப்படுகிறது.

Published:Updated:
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அறிக்கை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஐந்து மாதங்களுக்குப் பிறகு 'உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இந்த மசோதா இருக்கிறது' என தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பினார். இந்தச் சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மேலும், இது தொடர்பாக, தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் நாளைய தினம் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார். இந்த நிலையில், தமிழக ஆளுநர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளப்போவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பிப்ரவரி 7-ம் தேதி தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, 9-ம் தேதி வரை அங்கிருப்பார் என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநரின் டெல்லி பயணம் அரசியல் அரங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆளுநர் ரவி டெல்லியில் குடியரசுத் தலைவரைச் சந்திப்பாரா அல்லது மற்ற மத்திய அமைச்சர்களைச் சந்திப்பாரா எனப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism