Published:Updated:

மீண்டும் சர்ச்சைக்கு வித்திட்ட  `ஜெய்ஹிந்த்’... டெல்லிக்குக் கட்டுப்பட்ட ஆளுநர்?!

ஆளுநர் உரை
News
ஆளுநர் உரை

இரண்டாவது முறையாக ஆளுநர் உரையில் தி.மு.க அரசு தங்களது அழுத்தமான முடிவை வெளிப்படையாகவே காட்டியுள்ளது. இது இப்போது அடுத்த சர்ச்சைகக்கு வித்திட்டிருக்கிறது என்கிறார்கள். 

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசு விவாகரத்தில் தி.மு.க அரசு மேற்கொள்ளும் சில அழுத்தமான முடிவுகளும், அதற்கு எதிர்வினையாக மத்திய அரசின் ரியாக்‌ஷனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

கலைவாணர் அரங்கம் - சட்டசபை
கலைவாணர் அரங்கம் - சட்டசபை

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஆளுநர் உரையுடன் தொடங்கிய முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது ஆளுநர் உரையின் தமிழாக்கத்தில் `ஒன்றியம்’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தது தமிழக அரசு. அதுவே அப்போது விவாதப்பொருளாக மாறியது. அதேபோல், ஆளுநர் உரையை நிறைவு செய்யும்போது `ஜெய்ஹிந்த்’ என்கிற வார்த்தை இடம்பெறும். ஆனால், அன்றைய ஆளுநர் உரையில் `ஜெய்ஹிந்த்’ என்கிற வார்த்தை இடம்பெறவில்லை என்பதால், ஆளுநரும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தாமலேயே உரையை நிறைவு செய்தார். இதற்கு பாஜக தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு, ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ஆளுநரின் உரையை ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது தமிழக அரசு. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்த ஆளுநர் உரையில் ஏற்பட்ட சர்ச்சைகள் இப்போதைய ஆளுநருக்கு தெரிந்திருந்ததால், ஆளுநர் உரையைத் தயார் செய்த பிறகு அதில் சில திருத்தங்களைச் செய்ய ஆளுநர் தரப்பும் முடிவெடுத்தது. குறிப்பாக இது குறித்து டெல்லி வரை ஆளுநர் தரப்பு ஆலோசனை நடத்தியிருந்தது. அந்த அடிப்படையில் ஆளுநர் இன்று உரையை நிறைவு செய்தபோது,``வாழிய செந்தமிழ்... வாழிய நற்றமிழர்...வாழிய பாரத மணித்திருநாடு” என்று சொல்லிவிட்டு, ``ஜெய்ஹிந்த்” என்கிற வார்த்தையைச் சொல்லி உரையை நிறைவு செய்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆனால் ஆளுநர் உரையைத் தமிழில் வாசித்த தமிழக சட்டமன்றப் பேரவையின் சபாநாயகர் அப்பாவு, உரையை நிறைவு செய்யும்போது ``வாழிய பாரத மணித்திருநாடு” என்று சொல்லி நன்றி, என்றதோடு அவரது உரையை நிறைவு செய்தார். ஆளுநர் பயன்படுத்திய `ஜெய்ஹிந்த்’ என்கிற வார்த்தையை சபாநாயகர் பயன்படுத்தவில்லை. இரண்டாவது முறையாக ஆளுநர் உரையில் தி.மு.க அரசு தனது அழுத்தமான முடிவை வெளிப்படையாகவே காட்டியிருக்கிறது. இது இப்போது அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது என்கிறார்கள்.