Published:Updated:

கூடுதல் கட்டுப்பாடுகள்... வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதி இல்லை - தமிழக அரசு உத்தரவு!

தமிழக அரசு
News
தமிழக அரசு

கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாகக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவேண்டிய அவசியம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வரும் பண்டிகை கால நேரங்களில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதால் நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தகவல் தெரிவித்தனர்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

மேலும் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றன. இந்த கூட்டத்தில், ``தற்போது உள்ள ஊரடங்கு நடைமுறை மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31.01.2022 வரை நடைமுறைப்படுத்தப்படும். 14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டுத்தலங்களுக்கும் அனுமதி இல்லை. 16.01.2022 ஞாயிறு அன்று முழு ஊரடங்கு. பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் மக்களின் நலன் கருதி பொது பேருந்தில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவிகிதம் மட்டும் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்" போன்ற அறிவிப்புகள் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அரசின் அறிக்கையைக் கீழ் உள்ள இணைப்பில் படிக்கலாம்...

download