Published:Updated:

குடியரசு தினவிழா அணிவகுப்பு: மேற்கு வங்க, தமிழக அலங்கார ஊர்திகள் நிராகரிப்பு! - என்ன காரணம்?

குடியரசு தினவிழா அணிவகுப்பு

டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கேரளா, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குடியரசு தினவிழா அணிவகுப்பு: மேற்கு வங்க, தமிழக அலங்கார ஊர்திகள் நிராகரிப்பு! - என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கேரளா, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
குடியரசு தினவிழா அணிவகுப்பு

தென் மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர, அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் சார்ப்பில் அணிவகுப்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவப் படங்கள் அந்த அலங்கார ஊர்தியில் இடம்பெற்றிருந்தன. தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4-வது சுற்று வரை சென்ற நிலையில், வ.உ.சி., வேலு நாச்சியார் ஆகியோர் சர்வதேச தேசிய அளவில் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இல்லை எனக் கூறி நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுவதாகவும், இதைப் பற்றி மத்திய அரசுக்குக் கடிதம் எழுத வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டுக்கான அலங்கார ஊர்திகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இதனால் நிராகரிக்கப்பட்ட மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இந்த முறை கலந்துகொள்ள முடியாது எனவும் கூறப்படுகிறது.

வேலுநாச்சியாரின் பிறந்தநாள் அன்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பதிவில், ``வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்காலத் தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்புக்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

வேலு நாச்சியார் தேசிய அளவில் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர் இல்லை எனக் கூறி மத்திய அரசு நிராகரித்ததற்கு இணையவாசிகள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குடியரசு தினத்தன்று மேற்கு வங்காளத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவையொட்டி ஜனவரி 26-ம் தேதி அணிவகுப்பு நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் டெல்லியில் அணிவகுப்பும் நடைபெறவிருந்தது. இந்த நிகழ்வில் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், அந்த மாநிலத்தின் பண்பாடு, கலாசாரத்தைப் பறைசாற்றும்விதமாக அலங்கார ஊர்திகளை அடையாளப்படுத்துவது வழக்கம்.

அந்தந்த மாநிலத்தின் முக்கியத் தலைவர்களை நினைவுகூரும்விதமாக அலங்கார ஊர்திகள் அலங்காரம் செய்யப்படும். இந்த ஆண்டு டெல்லியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு மேற்கு வங்காளத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக முதலில் தகவல் வெளியாக, அது மேற்கு வங்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தற்போது மேற்கு வங்க ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து, பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ``குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மேற்கு வங்கம் முன்னணியில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் பிரிவினையின் மூலம் நாட்டின் சுதந்திரத்துக்காக மிகப்பெரிய விலையைச் செலுத்தியுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, மேற்கு வங்கத்தின் சார்பில் அவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்திகளில் சிறப்பாகத் தயார் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு
மத்திய அரசு

மேலும் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் மற்றும் பல தேச பக்தர்களின் உருவப் படங்களை ஊர்தி சுமந்து செல்லவிருக்கிறது. இதனால் மத்திய அரசு இது குறித்து மறுபரிசீலனை செய்து, குடியரசு தினவிழாவில் மேற்கு வங்க அலங்கார ஊர்திகளுக்கு அனுமதியளிக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் மம்தா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திகள் பங்கேற்க 2015, 2017 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism