Published:Updated:

பரந்தூர் விமான நிலையம்: அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போராட்டக்குழுவினர்! - நடந்தது என்ன?

பரந்தூர் விமான நிலையம்: அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி நேற்று பேரணி நடத்திய போராட்டக்குழுவினர் இன்று அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரந்தூர் விமான நிலையம்: அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போராட்டக்குழுவினர்! - நடந்தது என்ன?

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி நேற்று பேரணி நடத்திய போராட்டக்குழுவினர் இன்று அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Published:Updated:
பரந்தூர் விமான நிலையம்: அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை

மத்திய, மாநில அரசுகள் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் 4,563 ஏக்கர் நிலப்பரப்பில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டுவருகின்றன. இதற்கு ஆரம்பம் முதலே 13 கிராமங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை அரசுக்கெதிராக குரலெழுப்பி வருகின்றன. இருப்பினும் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில், ரூ.2,467 கோடி மதிப்பில் விமான நிலையம் அமையவிருக்கிறது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கிடையில், பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தொழில்நுட்பப் பொருளாதார அறிக்கை தயாரிக்க தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியது.

பரந்தூர் விமான நிலையம்
பரந்தூர் விமான நிலையம்

அதைத் தொடர்ந்து, சிங்கிலிபாடி, மாடபுரம், பரந்தூர் உட்பட 13 கிராமத்தினர் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களிடம், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்படி போராட்டக்குழுவினர், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அன்பரசன் ஆகிய 3 அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போராட்டக்குழுவினர், ``இந்த இடத்தில் வேளாண்மை நிலம் இருக்கிறது, குடியிருப்பு பகுதிகள் இருக்கின்றன. இவர்கள் அறிவித்திருக்கிற 4,800 ஏக்கரில், 3,500 ஏக்கர் முற்றிலும் விளைநிலங்கள். அதில் 2,500 ஏக்கர் நஞ்சை, 800 ஏக்கர் புஞ்சை, 1,317 ஏக்கர் அரசு நிலங்கள் என்று சொல்கிறார்கள். அதில் ஆயிரம் ஏக்கர் ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஓடைகள் நிறைந்த நீர் நிலை. மீதி 317 ஏக்கர் மட்டும்தான் அரசினுடைய இந்த கிராம நத்தம். இது தொடர்பாக அரசு தரப்பில், `இந்த நிலைகள் எல்லாம் முழுமையாக ஆராய்ந்து pre feasibility test-ல் (முன் சாத்தியக்கூறு ஆய்வு) நாங்கள் அழைக்கும் நிறுவனம், எங்களுக்குச் சொல்லும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்கப்படும்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு
ட்விட்டர்

அதுவரை நீங்கள் காத்திருங்கள் வேறு எந்த விதமான முடிவுகளுக்கும் செல்ல வேண்டாம். விமான நிலைய திட்டத்தை அறிவிப்பது pre feasibility test-க்கு பிறகுதான், இப்போது அல்ல. நீங்கள் அச்சப்படாமல் pre feasibility test-க்காக காத்திருங்கள். மேலும் அந்த feasibility test-க்காக வரக்கூடிய நிறுவனத்தை, கள ஆய்வு செய்ய வரும்போது உங்களுக்கு நாங்கள் அறிவிப்போம். உங்கள் போராட்டக்குழுவின் சார்பாக அத்தனை தரவுகளையும் நீங்கள் அங்கு தாருங்கள்' என்று சொன்னார்கள்" என்றனர்.

மேலும், தேவைப்படும் நேரங்களில் அரசின் அறிவிப்புகளுக்கேற்ப தங்களின் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களை எடுக்கும் என்பதையும் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.