Published:Updated:

``மோடிக்கு இரட்டை இலைச் சின்னத்துல ஓட்டுப் போடுங்க!'' - 2019-ன் டாப் அரசியல் உளறல்கள்

உள
உள

குட்கா யூஸ் பண்றவனுக்கு குட்காதான் வரும்... பா.ம.க-வுக்கு ஆப்பிள் சின்னம்... எளிய மக்கள் 'பானை ஓலை'களில் எழுதுவார்கள்... இன்னும் இதுபோன்ற உளறல் பேச்சுகளைப் பற்றி படிக்க, ஸ்க்ரால் செய்யுங்க மக்களே!

2016-ம் ஆண்டு மத்தியிலிருந்தே நமக்கு மிகப் பெரிய பொழுதுபோக்காக அமைந்தது, அரசியல்வாதிகளின் உளறல்கள்தாம். இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்ற காரணத்தால் பொதுக்கூட்டம், பிரசாரம் என கடந்த 2 ஆண்டுகளைவிட உளறல்களில் தாராளம் காட்டியுள்ளனர், தமிழகத்தின் அரசியல் தலைவர்கள். அமைச்சர்கள் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை உளறிக் கொட்டியதன் தொகுப்பை இங்கே காணலாம்...

ராஜேந்திர பாலாஜி

பிரசாரக் கூடத்தில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாகிஸ்தான்மீது குண்டு மழை பொழிந்த விமானப்படையின் 'விங் கமாண்டர்' அபிநந்தன் என்று கூறுவதற்குப் பதிலாக, 'டங்க் ஸ்லிப்' ஆகி, 'கிங் கமாண்டர்' அபிநந்தன் எனக் கூறினார். நல்ல வேளை அபிநந்தன் என்ற பெயரையாவது சரியாகச் சொன்னாரே என அங்கிருந்த நிர்வாகிகள் நொந்துகொண்டனர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்
`முஷாரப்புக்கு அளித்த தண்டனை கொடுமையானது' - வருத்தப்படும் ராஜேந்திர பாலாஜி!

பிரதமர் மோடியை 'டாடி' என்று சொல்லிவந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்த ஆண்டின் மத்தியிலிருந்து அவரை 'ஸ்டண்டு மாஸ்டர்' என்று சொல்லிவருகிறார். "நாட்டுக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே மல்லுக்கட்டி தடுக்கக்கூடிய மனிதர் மோடி என்பதால், அவர் ஸ்டண்டு மாஸ்டர்தான்" என்று ஸ்டண்டு யூனியனுக்கே சவால் விடுகிறார் அமைச்சர்.

மற்றுமொரு பிரசாரக் கூட்டத்தில், 'ராகுல் காந்தி' என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, 'ராஜீவ் காந்தி' என்று பலமுறை குறிப்பிட்டு பீதியைக் கிளப்பினார் மனிதர்.

எப்பயாவதுனா பரவாயில்ல... எப்பயுமே இப்படிதானா எப்பிடி?

எஸ்.ஜி.சுப்பிரமணியன்

எஸ்.ஜி.சுப்பிரமணியன்
எஸ்.ஜி.சுப்பிரமணியன்

சாத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் , டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க சார்பில் எஸ்.ஜி.சுப்பிரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தத் தொகுதி மக்கள், அ.ம.மு.க வேட்பாளரான என்னை நிச்சயம் வெற்றிபெறச் செய்வார்கள். இது, நிச்சயம் நடக்கும். அண்ணன் எடப்பாடியைத் தமிழகத்தின் முதல்வராக ஆக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது. நிச்சயம் நான் வெற்றிபெறுவேன்" என்று உளறிக் கொட்டினார்.

டி.டி.வி.யா? எடப்பாடியா? பாவம் அவரே கன்ஃபியூஸ் அயிட்டாரு!

பிரேமலதா விஜயகாந்த்

புல்வாமா தாக்குதலை நடத்தியவரே மோடிதான்!
பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்
தே.சிலம்பரசன்

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து, கணபதி பேருந்து நிலையம் அருகே பிரேமலதா பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 'புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்தவர் பிரதமர் மோடி' என்று கூறுவதற்குப் பதிலாக, "புல்வாமா தாக்குதலை நடத்தியவரே மோடிதான்" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

வரலாறு முக்கியம் மேடம்!

மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலோடு 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற்றது. அதற்கான பிரசாரக் கூட்டத்தில், தி.மு.க கூட்டணியிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு பேர் என்பதை மேடையில் வைத்தே கணக்குப் போட்டார் ஸ்டாலின், "தி.மு.க 87, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி 1, ஆக மொத்தம் 107" என்றார். அதைக் கேட்ட நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக இன்னொரு பொதுக்கூட்டத்தில் மக்களை நோக்கி, "தி.மு.க 87, கூட்டணிக் கட்சிகள் 9 மொத்தம் எத்தனை சொல்லுங்க பார்ப்போம்" என்றார் ஸ்டாலின். மக்கள் சரியாக 96 என்றனர். ஆனால் ஸ்டாலினோ, " என்ன தப்பா சொல்றீங்க... மொத்தம் 97" என்றார். மீண்டும் தி.மு.க நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க கூட்டணியின் சார்பாக சிதம்பரம் தொகுதியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை ஆதரித்துப் பேசிய ஸ்டாலின், "மண்பானைக்கு வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. எளிய மக்கள் பானை ஓலைகளில் எழுதி வைப்பார்கள்" என்றார். அது 'பனை ஓலைதானே' என்று அங்கிருந்த மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

87+8+1 = 107
மு.க.ஸ்டாலின்

சி.பி.எம் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "2005-ம் ஆண்டு பிரதமராக இருந்த சோனியா காந்தி அம்மையார்..." என்று கூறி, பின்னர் மன்மோகன் சிங் என்று சரியாகக் கூறியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

வள்ளுவர் சிலைக்குக் காவி நிறம் பூசி பா.ஜ.க-வினர் ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்திற்குக் கண்டனம் கூறும்போது, "பெரியார் சிலையை பா.ஜ.க-வினர் அவமதிப்பு செய்கிறார்கள்" என்று மாற்றிக் கூறி, ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டார் ஸ்டாலின்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...
குட்கா யூஸ் பண்றவனுக்கு நிச்சயமாக குட்காதான் வரும்... அத தடுக்கவே முடியாது!
பிரசாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்
'குட்கா பயன்படுத்தினால் கேன்சர்தான் வரும்' என்று சொல்ல நினைத்தவர், மேற்கண்டவாறு கூறி மீம் கிரியேட்டர்களிடம் சிக்கித் தவித்தார்.

கே.சி.கருப்பண்ணன்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், புல்வாமா தாக்குதல் பற்றிப் பேசியபோது, "அந்த பைலட் விஜயானந்த நாங்க பாராட்டுறோம்" என்று உளறியபோது, 'யாருடா அது விஜயானந்த்' என்று மீம்ஸ்கள் பறக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் விமானி அபிநந்தனைத்தான் குறிப்பிடுகிறார் என்று தெரிந்துகொண்ட மீம் கிரியேட்டர்கள், 'யாருடா இந்த அமைச்சர் பார்த்ததேயில்ல' என்று மீம்களைத் தெறிக்கவிட்டனர்.

கே.சி.கருப்பண்ணன்
கே.சி.கருப்பண்ணன்
Vikatan

கனிமொழி

தூத்துக்குடியில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய கனிமொழி, "இந்த வேதாந்தா நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கம் வங்கிகள் வழியாகக் கொடுத்துள்ள கடன் தொகை எவ்வளவு தெரியுமா, ஒரு கோடியே... ஒரு கோடியே 3000 கோடிகள்" என்று கூறி புதியதொரு எண் கணிதத்தை அறிமுகப்படுத்தி மக்களை ஆச்சர்யப்படுத்தினார்.

திண்டுக்கல் சீனிவாசன்

எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், "மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வாஜ்பாய் அறிவித்துள்ளார். மிகவும் அருமையான பட்ஜெட்" என்றார். கூட்டத்திலிருந்த அ.தி.மு.க நிர்வாகிகள், 'என்னது வாஜ்பாயா' என்று ஷாக் ஆகி நின்றனர்.

நரேந்திர மோடியின் பேரன் ராகுல் காந்தி
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "நரேந்திர மோடி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார்கள், அவருடைய பேரனான ராகுல் காந்தி, மற்றொரு பக்கம் போட்டியிடுகிறார்கள்" என்று கூறி அங்கிருந்த தொண்டர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வைத்தார். 'வாஜ்பாய் பிரதமர்' என்று சொன்னதைக்கூட பொறுத்துக்கொண்ட பா.ஜ.க -வினர், மோடியின் பேரன் ராகுல் காந்தி என்று சொன்னதைக் கேட்டதும் கொதித்துவிட்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்கு சேகரிப்பின் ஒரு பகுதியாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பா.ம.க வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்துப் பேசிய அமைச்சர், "நமது வேட்பாளர் சோலைமுத்துவுக்கு வாக்களியுங்கள்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் பிரதமராக ஆசைப்படுபவர்களின் பட்டியலைச் சொல்லும்போது மம்தா, சரத்பவார் என்று சொல்வதற்குப் பதிலாக, 'மம்தா, சரத்குமார்' என்றார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட, 'இப்போது சரியாகக் கூறுகிறேன் பாருங்கள்' என்ற தொனியில் சரத்பாபு என்றார் மனிதர். 'நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லும் கட்சியிலிருந்து கொண்டு, நடிகர்களைப் பிரதமராக்கிவிடுவார் போல' என்று மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன.

ஸ்டாலின் தற்போது பேசும் அனைத்துக் கூட்டத்திலும் உளறிக் கொட்டிவருகிறார். அதனால் அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான பா.ம.க-வின் 'ஆப்பிள்' சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
தேர்தல் பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன்

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பா.ம.க-வினர், ஆப்பிள் இல்லை மாம்பழம் என்று கூறினர். பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இதைக் கேட்டதும் அப்செட் ஆகிவிட்டார்.

ராமதாஸ்

ராமதாஸ்
ராமதாஸ்

பொதுக்கூட்டத்தில் பேசும்போது, எந்தக் காரணத்திற்காகவும் 'தி.மு.க காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடக்கூடாது' என்று பேச முயற்சி செய்தபோது, 'தி.மு.க அ.தி.மு.க-விற்கு ஓட்டு போடாதீர்கள்' என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மேடையில் உளறியது, கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பழக்க தோஷத்துல சொல்லியிருப்பாரு!
மீண்டும் வாஜ்பாய் அவர்கள் பிரதமராக வேண்டும்.
மற்றொரு பிரசாரக் கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ்

ஓ.எஸ்.மணியன்

அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "இந்த நாட்டுக்கு பாதுகாப்பான முதலமைச்சர் வேண்டும். அதனால மோடிக்கு இரட்டை இலை சின்னத்துல ஓட்டு போடுங்க" என்று உளறி, செயல் வீரர்களைக் கடுப்பேற்றினார்.

அடுத்த கட்டுரைக்கு