Published:Updated:

`பகல் கனவு’ ; `அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி’ - பட்ஜெட் குறித்து அண்ணாமலை முதல் கே.எஸ்.அழகிரி வரை

தமிழக பட்ஜெட் - தலைவர்கள் கருத்து

தமிழக பட்ஜெட் 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதிபோல் இல்லாமல்’ செயல்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருக்கிறார்.

`பகல் கனவு’ ; `அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி’ - பட்ஜெட் குறித்து அண்ணாமலை முதல் கே.எஸ்.அழகிரி வரை

தமிழக பட்ஜெட் 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதிபோல் இல்லாமல்’ செயல்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருக்கிறார்.

Published:Updated:
தமிழக பட்ஜெட் - தலைவர்கள் கருத்து

தமிழக சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

``இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் பெரும்பாலும் பிரதமர் மோடியின் திட்டங்களைத் தமிழ்ப்படுத்தியதுபோல இருந்தது. தமிழக மக்களின் பண்பாடு, வரலாறு, தொன்மைகள் அடையாளமாகப் பழிமையான கோயில்கள் உள்ளன என்பதை தமிழக பட்ஜெட்டில் ஒப்புக்கொண்டதற்கு முதல்வருக்கு நன்றி. ஆக, தமிழகக் கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்” என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

``நேரடியாக மக்களுக்குப் பயன் தரக்கூடிய திட்டங்கள் இல்லாத நிதிநிலை அறிக்கையாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது” என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

``நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும்கூட, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது” என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

பட்ஜெட்
பட்ஜெட்

``மத்திய அரசின் திட்டங்களைப் பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை. தொலைநோக்குத் திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலும்போது ரூ.1,000 வழங்கப்படும் எனத் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஆனால் இது 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதிபோல் இல்லாமல்’ செயல்படுத்தப்பட வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ``பத்து ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியின் தவறான நிதி மேலாண்மையின் காரணமாக, 2021-ல் ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3.5 லட்சம் கோடியும் என ஏறத்தாழ ரூபாய் 10 லட்சம் கோடி கடன் சுமை தி.மு.க தலைமையிலான ஆட்சிக்கு விட்டுச் செல்லப்பட்டது. நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூபாய் 4,816 கோடி நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூபாய் 1,000 கோடியும், பேரிடர் மேலாண்மைத்துறைக்கு ரூபாய் 7,400 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கக்கூடியது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்துகிற வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களைப் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism