Published:Updated:

நீட் விலக்கு மசோதா: திருப்பியனுப்பியதற்கான ஆளுநரின் அறிக்கை!- சபாநாயகர் விளக்கம்

சபாநாயகர் அப்பாவு

10 மணிக்கு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் முதலாவதாக, மசோதாவைத் திருப்பியனுப்பியதற்கான ஆளுநரின் விளக்க அறிக்கையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

நீட் விலக்கு மசோதா: திருப்பியனுப்பியதற்கான ஆளுநரின் அறிக்கை!- சபாநாயகர் விளக்கம்

10 மணிக்கு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் முதலாவதாக, மசோதாவைத் திருப்பியனுப்பியதற்கான ஆளுநரின் விளக்க அறிக்கையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

Published:Updated:
சபாநாயகர் அப்பாவு

நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆலோசனைக்குழுவின் பரிந்துரையின்படி, தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மசோதாவை, கடந்த வாரம் ஆளுநர் ஆர்.என். ரவி மறுபரிசீலனை செய்யுமாறு அரசுக்கே திருப்பியனுப்பியிருந்தார். பின்னர் இந்த விவகாரத்துக்கு உடனடி தீர்வு காணும்விதமாக முதல்வர் ஸ்டாலின் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தி மீண்டும் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்வதாக முடிவெடுத்திருந்தனர். இதையடுத்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் முதலாவதாக, மசோதாவை திருப்பியனுப்பியதற்கான ஆளுநரின் விளக்க அறிக்கையை வாசித்த சபாநாயகர் அப்பாவு, "உயர்மட்டக்குழுவின் அறிக்கை எந்த வகையிலும் ஏற்கக்கூடியதாக இல்லை. இக்குழுவின் அறிக்கை காமாலைக் கண்ணால் ஒருதலைபட்சமாகப் பார்ப்பது போன்று உள்ளது. மாநில பாடத்திட்டம் உயிரியல், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் தேர்வு முறையானதுதான். நீட் தேர்வு பட்டியலின, பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை வளர்ப்பதற்கு உறுதுணை புரிகிறது. மருத்துவக் கல்வி இடங்களை விற்பனை செய்யும் பொருளாதாரத் தவறுகளை இது தடுக்கிறது. நீட் தேர்வு விதிகளை மீறவில்லை என்று வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு அரசமைப்பு சட்ட விதிகளை ஒட்டியே அமைந்துள்ளது என்பதைத் தனித்துக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை. நலிந்த பிரிவினரின் நலனுக்காக நீட் தேர்வு தேவை என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்பது சரியானதா?

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

இதன் அடிப்படையில், அரசு அனுப்பியுள்ள இந்த சட்ட முன்வடிவு மாநில மாணவர் நலனுக்கு உகந்ததாக இல்லை என நான் கருதுவதால், அரசமைப்புச் சட்டம் பிரிவு 200-ல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தச் சட்ட முன்வடிவை அவையின் மறுபரிசீலனைக்கு அனுப்புகிறேன்" என ஆளுநரின் விளக்கக் கடிதத்தில் இடம்பெற்றதை சபாநாயகர் பேசினார்.