Published:Updated:

``உணவுப் பொருள்கள்மீதான ஜிஎஸ்டி-யை திரும்பப் பெறாவிட்டால் நாடு தழுவிய கடையடைப்பு!"- வணிகர் பேரமைப்பு

வணிகர்கள் பொதுக்கூட்டம்

``இந்த வரியை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் மாநில அளவில் அல்ல... தேசிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்." - விக்ரமராஜா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்ரமராஜா, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இன்று நடைபெற்ற வணிகர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். வணிகர்களின் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் விக்ரமராஜா, ``அரிசி, கோதுமை, தயிர், பால் உள்ளிட்ட பல பொருள்களுக்கு மத்திய அரசு அண்மையில் ஜி.எஸ். டி வரி விதித்திருக்கிறது. உணவுப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட வரியை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது.

விக்ரமராஜா
விக்ரமராஜா

அடுத்தக் கட்டமாக மதுரையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவிருக்கிறது. டெல்லியிலும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய வணிகர் சங்க சம்மேளனம் உறுதி அளித்திருக்கிறது. அப்படியும் இந்த வரிகளை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் மாநில அளவில் அல்ல... தேசிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!