Published:Updated:

``தமிழகத்தை திராவிட இயக்கங்கள்தான் ஆளும்!" - செங்கோட்டையன் பேச்சுக்கு திமுக-வினர் ஆதரவு

செங்கோட்டையன்

``தமிழகத்தை திராவிட இயக்கங்கள்தான் ஆளும்’’ என சட்டப்பேரவையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருக்கிறார்.

``தமிழகத்தை திராவிட இயக்கங்கள்தான் ஆளும்!" - செங்கோட்டையன் பேச்சுக்கு திமுக-வினர் ஆதரவு

``தமிழகத்தை திராவிட இயக்கங்கள்தான் ஆளும்’’ என சட்டப்பேரவையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருக்கிறார்.

Published:Updated:
செங்கோட்டையன்

தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. இதில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அதை ரத்துசெய்ய வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதிமுக - திமுக
அதிமுக - திமுக

அதைத் தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில், எது மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பது குறித்துப் பேசியதாகத் தெரிகிறது. பின்னர் பேசிய அவர், ``தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள்தான் ஆளும். வேறு எவராலும் தமிழ்நாட்டை ஆள முடியாது" என்றார்.

செங்கோட்டையனின் பேச்சை வரவேற்கும்விதமாக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, தி.மு.க உறுப்பினர்களும் மேஜையைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர். பா.ஜ.க விரைவில் தமிழகத்தை ஆளும் என்று கூறிவரும் நிலையில், செங்கோட்டையனின் பேச்சு அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism