Published:Updated:

``வணிகர்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால்..!" - வணிகர் மாநாட்டில் ஸ்டாலின்

மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

``பெரிய நிறுவனங்கள் வளர்வதை மட்டுமே பொருளாதார வளர்ச்சி என நான் நினைக்கவில்லை. மிகப்பெரிய தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல், சிறு வணிகர்களும் வளர வேண்டும்.’’

``வணிகர்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால்..!" - வணிகர் மாநாட்டில் ஸ்டாலின்

``பெரிய நிறுவனங்கள் வளர்வதை மட்டுமே பொருளாதார வளர்ச்சி என நான் நினைக்கவில்லை. மிகப்பெரிய தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல், சிறு வணிகர்களும் வளர வேண்டும்.’’

Published:Updated:
மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், 39-வது வணிகர் தினத்தையொட்டி நேற்று ‘தமிழக வணிகர் விடியல் மாநாடு’ திருச்சி, சமயபுரம் அருகே நடைபெற்றது. காலையில் சட்டமன்றத்துக்குச் சென்று கேள்வி நேர நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானம் மூலமாக திருச்சிக்கு வந்தார். மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளம் தொழில்முனைவோர் என்கின்ற புதிய அமைப்பையும், வணிகர்களுக்காக `வணிகர் டிவி’ என்கிற தொலைக்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திவைத்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வணிகர் டி.வி-யை அறிமுகப்படும் முதல்வர்
வணிகர் டி.வி-யை அறிமுகப்படும் முதல்வர்

மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திருச்சின்னா எப்போதுமே தி.மு.க-வுக்கு திருப்புமுனை. அதேபோல வணிகர்களுக்கு இந்த மாநாடு நிச்சயமாக ஒரு திருப்புமுனையை உருவாக்கும். 1982-ம் ஆண்டு அ.தி.மு.க அரசு நுழைவு வரி சட்டத்தை நடைமுறைப்படுத்தியதை எதிர்த்து, மே 5-ம் தேதி சேலத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. சென்னையிலும் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில் வணிகர்கள் பலர் தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அப்படி வணிகர்கள் சிறைசெய்யப்பட்ட தினமான மே 5-ஐ தான் வணிகர் தினமாகக் கொண்டாடுகிறீர்கள். இப்போது நடப்பது நம்முடைய ஆட்சி. தி.மு.க ஆட்சி எப்போதுமே வணிகர்களின் நலனைப் பேணக்கூடிய ஆட்சியாகத்தான் இருந்திருக்கிறது. 1989-ம் ஆண்டு தலைவர் கலைஞர்தான் வணிகர் நல வாரியம் கொண்டு வந்தார். அதேபோல, பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு வணிகர்களை அழைத்துப் பேசி கருத்துகளைக் கேட்கும் முறையையும் தலைவர் கலைஞர் கொண்டு வந்தார். இப்போதும் அதைப் பின்பற்றித்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவருகிறது.

மாநாட்டில் மு.க.ஸ்டாலின்
மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

வணிகர்களுக்கு எந்தவித தொல்லையும் இருக்கக் கூடாது என்பது குறித்து தமிழக டி.ஜி.பி-யிடம் ஆலோசனை செய்தேன். அதில் காவல் உதவி செயலியில், வணிகர்களுக்கான தனிப்பகுதியையும் சேர்க்கச் சொல்லியிருக்கிறோம். வணிகர்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால், அந்தச் செயலியின் வழியாக புகார் அளித்தால் போலீஸார் உடனே சம்பவ இடத்துக்கு வந்து நடவடிக்கை எடுப்பார்கள். ஓரிரு வாரங்களில் இது செயல்பாட்டுக்கு வரும். வணிகர் நல வாரியத்தைச் செயல்படுத்த உங்களிலிருந்து புதிய உறுப்பினர்களை நியமிக்கவிருக்கிறேன். அதேபோல வணிகர் குடும்ப நல உதவித்தொகை ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். உடற்பயிற்சிக் கூடங்கள் தொடங்க இனி போலீஸாரிடம் அனுமதி பெறவேண்டியதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாநாட்டில் மு.க.ஸ்டாலின்
மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

இந்த அரசை ஏதேதோ சொல்லி களங்கம் ஏற்படுத்த முயல்கின்றனர். திட்டமிட்டு பரப்பும் அவதூறுகளுக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இது எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்கின்ற திராவிட மாடலில் நடைபெறக்கூடிய ஆட்சி. பெரிய நிறுவனங்கள் வளர்வதை மட்டுமே பொருளாதார வளர்ச்சி என நான் நினைக்கவில்லை. மிகப்பெரிய தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல், சிறு வணிகர்களும் வளர வேண்டும். ஆற்றல்மிக்க மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும். வணிகர்கள் நாள்தோறும் மக்களைச் சந்திக்கிறீர்கள். இந்த அரசினுடைய நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் தூதுவர்களாக நீங்கள் செயல்பட வேண்டும். நல்ல யோசனை எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும், அதைத் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism