Published:Updated:

``நீங்க எங்களுக்குக் கெடைச்ச பொக்கிஷம்!" - தஞ்சை மாநகராட்சி ஆணையரைப் பாராட்டி நெகிழ்ந்த மேயர்

ஆணையர் சரவணக்குமார்,சண்.இராம நாதன்,டாக்டர் அஞ்சுகம் பூபதி ( ம.அரவிந்த் )

ஆணையர் சரவணக்குமார் தஞ்சாவூர் மாநகராட்சிக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம் என மேயரும், தஞ்சையின் பொக்கிஷம் என துணை மேயரும் ஆணையரைப் பாராட்டி வாழ்த்திப் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Published:Updated:

``நீங்க எங்களுக்குக் கெடைச்ச பொக்கிஷம்!" - தஞ்சை மாநகராட்சி ஆணையரைப் பாராட்டி நெகிழ்ந்த மேயர்

ஆணையர் சரவணக்குமார் தஞ்சாவூர் மாநகராட்சிக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம் என மேயரும், தஞ்சையின் பொக்கிஷம் என துணை மேயரும் ஆணையரைப் பாராட்டி வாழ்த்திப் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆணையர் சரவணக்குமார்,சண்.இராம நாதன்,டாக்டர் அஞ்சுகம் பூபதி ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த சண்.இராமநாதன், துணை மேயராக டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து `ஆணையர் சரவணக்குமார் தஞ்சாவூர் மாநகராட்சிக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம்’ என மேயரும், `தஞ்சையின் பொக்கிஷம்’ என துணை மேயரும் ஆணையரைப் பாராட்டி வாழ்த்திப் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் திமுக மேயர் சண்.இராம நாதன்,ஆணையர் சரவணக்குமார்
தஞ்சாவூர் திமுக மேயர் சண்.இராம நாதன்,ஆணையர் சரவணக்குமார்

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில், தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் 40 வார்டுகளிலும், அ.தி.மு.க 7 இடங்களிலும், சுயேச்சைகள் இரண்டு இடங்களிலும், பா.ஜ.க., அ.ம.மு.க தலா ஓர் இடத்திலும் வெற்றிபெற்றன. இதையடுத்து மாநகராட்சின் மேயர் வேட்பாளராக தி.மு.க சார்பில் சண்.இராமநாதன், துணை மேயராக டாக்டர் அஞ்சுகம் பூபதி அறிவிக்கப்பட்டனர். பின்னர், நேற்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் இருவரும் வெற்றிபெற்றனர்.

அதைத் தொடர்ந்து சண்.இராமநாதனிடம் வெற்றிக்கான சான்றிதழை ஆணையர் சரவணக்குமார் வழங்கினார். பின்னர் புதிதாகப் பொறுப்பேற்ற அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களும், மேயர் மற்றும் துணை மேயரை வாழ்த்தியதுடன் அதற்கு இணையாக ஆணையரையும் வாழ்த்தினர். அத்துடன் மேயருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தவர்கள் அனைவரும் தேர்தலை நியாயமான முறையில் நடத்தியதாகக் கூறி ஆணயருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

துணை மேயரான டாக்டர் அஞ்சுகம் பூபதிக்கு சால்வை அணிவிக்கும் சண்.இராமநாதன்
துணை மேயரான டாக்டர் அஞ்சுகம் பூபதிக்கு சால்வை அணிவிக்கும் சண்.இராமநாதன்

மேயராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சண்.இராமநாதன் பேசுகையில், ``தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சிறந்த ஆணையர் கிடைத்திருக்கிறார் நான் ஏற்கெனவே ஆணையரை ஹக் செய்யணும் என்று சொல்லியிருந்தேன். இப்போது ஹக் செய்து கொள்கிறேன். ஆணையர் சரவணக்குமார் நமக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம். நேர்மையான சிறந்த அதிகாரி. நான் மேயராக இருக்கும் வரை ஆணையராக இருந்து நீங்கள்தான் வழிநடத்த வேண்டும், உங்களோடு நாங்களும் பணிபுரிய வேண்டும்" என்றார்.

பின்னர் பேசிய அஞ்சுகம் பூபதி, ``பணியைத் தொடங்கிய நாள் முதல் தற்போது தேர்தல் நடத்தி முடித்திருப்பது வரை ஓர் அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும், நியாயமாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஆணையர் சரவணக்குமார் செயல்பட்டுள்ளார். எதற்கும் அஞ்சாமல் தனிச் சிறப்புமிக்க மனிதராக இருக்க வேண்டும் என்பதற்கும் உதாரணமாக இருக்கிறார். பழைமைவாய்ந்த தஞ்சாவூர் மாநகராட்சியின் பொக்கிஷமாக இருக்கிறார். நேர்கொண்ட பார்வையுடன் செயல்படுகிறார். ஆணையரைப்போலவே நான் உட்பட மாமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் இருப்போம். மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தைப் பெற நீங்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.

சண். இராமநாதன்,
ஆணையர் சரவணக்குமார்
சண். இராமநாதன், ஆணையர் சரவணக்குமார்

தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையர் சரவணக்குமார் தனது நேர்மையான நடவடிக்கையாலும், அதிரடியான செயல்களாலும் பணிக்கு வந்து குறைந்த மாதங்களிலேயே தஞ்சை மக்களின் நெஞ்சைக் கொள்ளைகொண்டார். ஆக்கிரமிப்பை அகற்றுதல் உள்ளிட்ட பலவற்றில் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் அதிரடி காட்டினார். தஞ்சையின் வளர்சிக்காக தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் செய்யவேண்டியதை வெளியூரிலிருந்து வந்த ஆணையர் செய்துகொண்டிருக்கிறார். அவரது பணியை யாரும் தடுக்காமல் இருந்தாலே ஊர் பெரிய வளர்ச்சியடையும் என தஞ்சை மக்கள் ஏற்கெனவே பேசிவந்தனர்.

இந்த நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பி.ஜே.பி-யைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி பலரும் ஆணையரைப் பாராட்டிப் பேசிவிட்டுச் சென்றனர். இதேபோல மேயர், துணை மேயர், மாமன்ற கவுன்சிலர்கள் எனக் கட்சி பாகுபாடின்றி பலரும் அவரைப் பாராட்டி வாழ்த்தியது அவரின் நேர்மைக்குக் கிடைத்த பரிசு என மாநகராட்சி ஊழியர்கள் நெகிழ்ந்தனர்.