Published:Updated:

பாரதிய ஜனதாவுக்கு அள்ளிக் கொடுத்த டாடா அறக்கட்டளை! -ஒரே ஆண்டில் ரூ.356 கோடி நன்கொடை!

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.99 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ரூ.147 கோடியை, மொத்த நன்கொடையாகப் பெற்றுள்ளது.

மோடியுடன் அமித் ஷா
மோடியுடன் அமித் ஷா

மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த ஆண்டு ரூ.743 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. அதில், டாடா குழும நிறுவனங்கள் அறக்கட்டளை (Progressive Electoral Trust) மட்டுமே ரூ.356 கோடி வழங்கியுள்ளது. அடுத்ததாக, புரூடன்ட் அறக்கட்டளை ரூ.54.25 கோடி வழங்கியுள்ளது. இந்த அறக்கட்டளையில் பார்தி, ஹீரோ, ஓரியன்ட் சிமெண்ட், டி.எல்.எஃப், ஜே.கே.டயர்ஸ் போன்ற நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. mu

பாரதிய ஜனதா கட்சிக்கு டாடா அறக்கட்டளை நன்கொடை
பாரதிய ஜனதா கட்சிக்கு டாடா அறக்கட்டளை நன்கொடை

கடந்த அக்டோபர் 31-ம் தேதி தேர்தல் கமிஷனிடத்தில் பாரதிய ஜனதா கட்சி சமர்ப்பித்த அறிக்கை வழியாக இந்த விவரம் தெரியவந்துள்ளது. அரசியல் கட்சிகள் ரூ.20,000-க்கு மேல் ஆன்லைனிலோ அல்லது செக் வழியாக நன்கொடை பெற்றால் அதுகுறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இந்த தொகைக்கு குறைவாகவோ அல்லது தேர்தல் பத்திரங்கள் வழியாகவோ நன்கொடை பெற்றால் அதுகுறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

``ரூ.826 கோடி நன்கொடை..!” - ஷிவ் நாடார் மீண்டும் முதலிடம்

கடந்த 16 வருடங்களில் ஒரே வருடத்தில், அதிக நன்கொடையாக இவ்வளவு பெரிய தொகையைப் பெற்ற கட்சி பாரதிய ஜனதா மட்டுமே. இந்த ஆண்டு மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.472 கோடியை நிதியாக வழங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கும் டாடா குழுமத்தின் Progressive Electoral Trust ரூ.56 கோடி நன்கொடையை வழங்கியுள்ளது.

நன்கொடை பெறுவதில் பாஜக முதலிடம்
நன்கொடை பெறுவதில் பாஜக முதலிடம்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் டாடா அறக்கட்டளை ரூ.43 கோடி வழங்கியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.99 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ரூ.147 கோடியை, மொத்த நன்கொடையாகப் பெற்றுள்ளது.