Published:Updated:

`ராணுவப் பள்ளிகளில் மாநில மொழிகளைக் கற்பிப்பது மாணவர்களுக்குத் தேவையற்ற சுமை!' -மத்திய இணை அமைச்சர்

பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் ( ட்விட்டர் )

`ராணுவ பப்ளிக் பள்ளிகளில் மாநில மொழிகளை மாணவர்களுக்குக் கற்பிப்பது உகந்தது அல்ல’ என பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்திருக்கிறார்.

`ராணுவ பப்ளிக் பள்ளிகளில் மாநில மொழிகளை மாணவர்களுக்கு கற்பிப்பது உகந்தது அல்ல’ என பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்திருக்கிறார்.

பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் இது தொடர்பாக நேற்று மக்களவையில் பேசியதாவது, ``இந்திய ராணுவப் பணியாளர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு முக்கியமான இடத்திலும் ராணுவ பப்ளிக் பள்ளிகள் (APS) நிறுவப்பட்டுள்ளன. நாடு முழுதும் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குழந்தைகளுக்காக, 136 ராணுவ பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.

பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட்
பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட்
ட்விட்டர்

இந்த நிலையில், ராணுவ வீரர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பணியிட மாற்றம் செய்யப்படலாம் என்ற சூழல் தற்போது நிலவிவருகிறது. அதனால், ஒவ்வொரு கல்வி அமர்வின் நடுவில் மாநில மொழியை மாற்றுவது, மாணவர்களுக்கு சிரமத்தை அளிக்கும். இதனால், ஆங்கிலம், இந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளைத் தரப்படுத்துதல் அவசியமாக உள்ளது. ராணுவப் பள்ளிகளில் மாநில மொழிகளைக் கற்பிப்பது, மாணவர்களுக்கு உகந்தது அல்ல. அவர்களுக்கு அது தேவையற்ற சுமையை ஏற்படுத்தும்'' என்றார். மேலும், இது தொடர்பாக அவர் எழுத்துபூர்வமாகவும் பதிலளித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism