Published:Updated:

தெலங்கானா: பாஜக மாநிலத் தலைவரை இழுத்துச் சென்று கைதுசெய்த போலீஸ்! - என்ன நடந்தது?

தெலங்கானா பா.ஜ.க
News
தெலங்கானா பா.ஜ.க

கொரோனா விதிமுறைகளை மீறிய காரணத்தால் அவர்களைக் கைதுசெய்ய காவல்துறையினர் முயன்றனர். அப்போது, கட்சிக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

தெலங்கானா மாநில பா.ஜ.க தலைவரும், மக்களவை உறுப்பினருமான பண்டி சஞ்சய் குமார், தெலங்கானா மாநில அரசுக்கு எதிராக நேற்று கரீம்நகரிலுள்ள பா.ஜ.க அலுவலகத்துக்கு முன்பு போராட்டம் அறிவித்திருந்தார். இந்தப் போராட்டத்தில் கொரோனா வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. கொரோனா விதிமுறை மீறிய காரணத்தால் அவர்களைக் கைதுசெய்ய காவல்துறையினர் முயன்றனர். அப்போது, கட்சிக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பண்டி சஞ்சய், கட்சிப் பிரமுகர்கள் அனைவரும் அலுவலகக் கதவைப் பூட்டிக்கொண்டு காவல்துறையினருக்கு அஞ்சி உள்ளே சென்றுவிட்டனர். அதையடுத்து, காவல்துறையினர், வெல்டிங் மெஷின் உதவியோடு பூட்டை உடைத்து, உள்ளே சென்று பண்டி சஞ்சய்யைக் கைதுசெய்ய முயன்றனர். அவரைக் காவல்துறையினர் ஒருபுறம் இழுக்க, கட்சிக்காரர்கள் மறுபுறமிழுக்கப் பெரும் போராட்டம் நடைபெற்றது. நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் காவல்துறையினர் சஞ்சயையும் பா.ஜ.க நிர்வாகிகளையும் கைதுசெய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கைதுசெய்யப்பட்ட கட்சி உறுப்பினர்கள்
கைதுசெய்யப்பட்ட கட்சி உறுப்பினர்கள்

அவர்கள்மீது கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும், காவல்துறையினரைத் தாக்கியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சஞ்சய் கரீம்நகர் நீதிமன்றத்தில் இன்று மதியம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, சஞ்சய்யை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தெலங்கானா காவல்துறையின் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.