Published:Updated:

தெலங்கானாவில் கிளம்பும் மதப் பிரச்னை... பாஜக எம்.எல்.ஏ கைதும் பின்னணியும்!

ராஜா சிங்- பாஜக

``பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் பேச்சு நுபுர் சர்மா நிகழ்வின் தொடர்ச்சிதானே தவிர வேறு எதுவும் இல்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ஹைதராபாத் அமைதியாக இருப்பதை அவர்களால் பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை.” - ஒவைசி

தெலங்கானாவில் கிளம்பும் மதப் பிரச்னை... பாஜக எம்.எல்.ஏ கைதும் பின்னணியும்!

``பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் பேச்சு நுபுர் சர்மா நிகழ்வின் தொடர்ச்சிதானே தவிர வேறு எதுவும் இல்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ஹைதராபாத் அமைதியாக இருப்பதை அவர்களால் பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை.” - ஒவைசி

Published:Updated:
ராஜா சிங்- பாஜக

ஸ்டாண்ட்-அப் காமெடியனான நடிகர் முனாவர் ஃபரூக்கி கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில், இந்துக் கடவுள்களையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவமதித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர், தொடர்ச்சியாக ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். முனாவர் ஃபரூக்கி நிகழ்ச்சி நடத்தும்போதெல்லாம் அவருக்கு பா.ஜ.க-வினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், ஃபரூக்கி ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். இதற்கு, தெலங்கானா மாநில கோஷாமஹால் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். ``முனாவர் ஃபரூக்கி தெலங்கானா வந்தால் அவருக்குத் தக்க பாடம் புகட்டுவோம்" என்றும் மிரட்டும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

நுபுர் சர்மா
நுபுர் சர்மா

இந்த நிலையில், முனாவர் ஃபரூக்கி ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் இந்துக் கடவுள்கள் குறித்து கேலி பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ ராஜா சிங் இணையத்தில் 10 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ஹைதராபாத்தில் நடைபெற்ற முனாவர் ஃபரூக்கியின் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நபிகள் நாயகத்தைக் குறிப்பிட்டும் அவதூறாகப் பேசியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜா சிங்- முனாவர் ஃபரூக்கி
ராஜா சிங்- முனாவர் ஃபரூக்கி

ராஜா சிங், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசி வெளியிட்ட காணொளி காரணமாகத் தெலங்கானாவில் இஸ்லாமியர்கள் போராட்டம் வெடித்தது. ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஹைதராபாத் காவல் ஆணையர் அலுவலகம் உட்பட அனைத்து போலீஸ் நிலையங்கள் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பா.ஜ.க எம்.எல்.ஏ-வைக் கைதுசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால், ஹைதராபாத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மதக் கலவரம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் பீதியடைந்தனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங்கை ஹைதராபாத் போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிமன்றத்துக்கு வெளியே ராஜா சிங் ஆதரவாளர்களுக்கும், எம்.ஐ.எம் கட்சியினருக்கு இடையே கைகலப்பும், வாக்குவாதமும் ஏற்பட்டது. போலீஸார் நிலைமையைக் கட்டுப்படுத்தினர். பின்னர், ராஜா சிங்கை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஒவைசி
ஒவைசி

இது குறித்து, கருத்து தெரிவித்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் ஒவைசி, "இது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் பாஜக-வின் திட்டமிட்ட முயற்சி. இந்த விவகாரம் நுபுர் சர்மா நிகழ்வின் தொடர்ச்சிதானே தவிர வேறு எதுவும் இல்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ஹைதராபாத் அமைதியாக இருப்பதை அவர்களால் பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை" என்றார்.

இதைத் தொடர்ந்து, தெலங்கானா பா.ஜ.க தலைமை, ராஜா சிங்கைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது. அதற்கான அறிக்கையில், `கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ராஜா சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

ராஜா சிங்- பாஜக எம்.எல்.ஏ
ராஜா சிங்- பாஜக எம்.எல்.ஏ

மேலும், `இந்தச் செயல் குறித்து ராஜா சிங் 10 நாள்களில் விளக்கமளிக்க வேண்டும்’ எனவும் அந்தக் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு ராஜா சிங் ராமநவமியின்போது "பாரதம் விரையில் இந்து ராஷ்டிரமாக மாறும். ராமர் பெயரை உச்சரிக்காதவர்கள் பாரதத்தைவிட்டு ஓட வேண்டும்" எனச் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். அப்போது, பொதுவெளியில் சமூக அமைதியைச் சீர்குலைத்ததாக அவர்மீது ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இதேபோல், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்துப் பேசியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.