Published:Updated:

‘பா.ஜ.க அல்லாத இந்தியா!’ - கே.சி.ஆரின் புதிய தேசியக் கட்சி பலன் தருமா?

ஸ்டாலின், மம்தாவுடன் சந்திரசேகர் ராவ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், மம்தாவுடன் சந்திரசேகர் ராவ்

தற்போதைய அதிரடி முன்னெடுப்புகளுக்கும் பா.ஜ.க எதிர்ப்புக்கும் காரணம், தெலங்கானாவில் பா.ஜ.க-வின் வளர்ச்சியே என்கிறார்கள் தெலங்கானா அரசியல் விமர்சகர்கள்.

‘பா.ஜ.க அல்லாத இந்தியா!’ - கே.சி.ஆரின் புதிய தேசியக் கட்சி பலன் தருமா?

தற்போதைய அதிரடி முன்னெடுப்புகளுக்கும் பா.ஜ.க எதிர்ப்புக்கும் காரணம், தெலங்கானாவில் பா.ஜ.க-வின் வளர்ச்சியே என்கிறார்கள் தெலங்கானா அரசியல் விமர்சகர்கள்.

Published:Updated:
ஸ்டாலின், மம்தாவுடன் சந்திரசேகர் ராவ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், மம்தாவுடன் சந்திரசேகர் ராவ்

அதிரடி அரசியலுக்குச் சொந்தக்காரரான தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தேசிய அளவில் புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.க-வை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் அவர், பா.ஜ.க-வை எதிர்க்கும் பல்வேறு மாநில முதல்வர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்துவருகிறார். செப்டம்பர் 26-ம் தேதி தொடங்கவிருக்கும் தசரா விழாவின் போது, `பாரதிய ராஷ்டிரிய சமிதி’ எனும் அவரின் புதிய தேசியக்கட்சி அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரசேகர் ராவின் இந்தப் புதிய பயணத்துக்கான காரணம் என்ன?

‘பா.ஜ.க அல்லாத இந்தியா!’ - கே.சி.ஆரின் புதிய தேசியக் கட்சி பலன் தருமா?
‘பா.ஜ.க அல்லாத இந்தியா!’ - கே.சி.ஆரின் புதிய தேசியக் கட்சி பலன் தருமா?

யார் இந்த சந்திரசேகர் ராவ்?

காங்கிரஸ் கட்சியில் தன்னுடைய அரசியல் வாழ்க்கை யைத் தொடங்கியவர், தெலுங்கு தேசக் கட்சி ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்தவர் `கே.சி.ஆர்’ என அழைக்கப்படும் சந்திரசேகர் ராவ். தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கைக் காக 2001-ல் ‘தெலங்கானா ராஷ்டிரிய சமிதி’ எனும் கட்சி யைத் தொடங்கினார். பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு, 2014-ல் தனி மாநிலத்தையும் அடைந்து தனது தலைமையில் ஆட்சியையும் அமைத்தார். ஐந்தாண்டுகள் முழுமை யடைவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பாகவே சட்டசபையைக் கலைத்து, தேர்தலில் பங்கேற்று, மாபெரும் வெற்றியைப் பெற்றார். தேர்தலை அவர் முன்பே நடத்தியதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன. ஒன்று, நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் நடத்தினால், தேசியக் கட்சிகள் தெலங்கானாவில் வளர்ந்துவிட வாய்ப்பு ஏற்படும். அடுத்து, மாநில அமைச்சர், மத்திய அமைச்சர், மாநில முதல்வர் எனப் பல்வேறு பதவிகளில் அமர்ந்துவிட்ட கே.சி.ஆரின் கனவாக இருந்த பிரதமர் பதவி. அதனால், இரண்டாவது முறை முதல்வரானவுடனேயே தேசிய அரசியலில் காலூன்ற முடிவெடுத்து, தன் மகன் கே.டி.ராமாராவைச் செயல் தலைவராகவும், ஆட்சியில் முக்கிய மூன்று துறைகளுக்கு அமைச்சராகவும் ஆக்கினார்.

தலைவர்களுடன் சந்திப்பு!

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சி களில் இறங்கினார் கே.சி.ஆர். மம்தா, தேவகவுடா, அகிலேஷ் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் எனப் பலரை யும் சந்தித்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை, கருணாநிதி இருந்தபோது அவரைச் சந்தித்த கே.சி.ஆர்., அவரின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலினையும் சந்திக்கத் தவறவில்லை. இப்படியாக தேசிய அளவில் அவர் காலூன்ற எடுத்த முன்னெடுப்புகள், ‘காங்கிரஸைத் தனிமைப்படுத்த பா.ஜ.க-வின் பி டீமாக ராவ் செயல்படுகிறார்’ என்கிற விமர்சனங்களால் அடிபட்டுப்போனது. அவர் எதிர்பார்த்த ஒத்துழைப்பு அப்போது கிட்டவில்லை. அதனால், அப்போது அவரின் மூன்றாவது அணி முயற்சி பலிக்கவில்லை.

‘பா.ஜ.க அல்லாத இந்தியா!’ - கே.சி.ஆரின் புதிய தேசியக் கட்சி பலன் தருமா?
‘பா.ஜ.க அல்லாத இந்தியா!’ - கே.சி.ஆரின் புதிய தேசியக் கட்சி பலன் தருமா?

குறிவைக்கும் ஆறு மாநிலங்கள்!

இரண்டாவது சுற்றுக்குத் தயாரான கே.சி.ஆர்., மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன், மு.க.ஸ்டாலின் எனத் தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களைக் கடந்த ஓராண்டுக்கும் மேலாகச் சந்தித்துவருகிறார். இந்த நிலையில் தான், அவரின் தேசியக் கட்சி குறித்தான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது குறித்து, சந்திர சேகர் ராவ் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தேசியச் செயல் திட்டங்களுடன்கூடிய தேசியக் கட்சியைத் தொடங்க ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை எடுக்க, பொருளா தார வல்லுநர்கள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேசியக் கட்சி அந்தஸ்து பெறுவதற்கு, நான்கு மாநிலங்களில் ஆறு சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெற்றாக வேண்டும். அந்த வகையில், தெலங் கானா தவிர, டெல்லி, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை முக்கியமாகக் குறிவைக்கத் திட்டமிட்டிருக்கிறார் கே.சி.ஆர்.

இந்த மாநிலங்களில் வாழும் தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என்பதே கே.சி.ஆரின் கணக்கு. குஜராத், கர்நாடகாவில் அடுத்தடுத்து தேர்தல் நடைபெறவிருக்கிறது. குஜராத்தைப் பொறுத்தவரை, சூரத் உள்ளிட்ட டெக்ஸ்டைல் தொழில் நிறைந்த பகுதிகளில் தெலுங்கு பேசும் மக்கள் குறிப்பாக, நெசவாளர்கள் கணிச மாக வாழ்கின்றனர். மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகியவை தெலங்கானாவோடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மாநிலங்கள். அங்கும் தெலுங்கு பேசும் மக்கள் ஏராளமாக வசிக்கின்றனர். தவிர, பெங்களூரிலும் டெல்லியிலும் தெலுங்கு பேசும் மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இதுமட்டு மல்லாமல், பா.ஜ.க-வை வலுவாக எதிர்ப்பதன் மூலமாகவும் பா.ஜ.க., காங்கிரஸுடன் கூட்டுச் சேராத மாநிலக் கட்சிகளு டன் கூட்டணி வைப்பதன் மூலமும் வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறார் கே.சி.ஆர். ஒருவேளை மத்தியில், பா.ஜ.க., காங்கிரஸ் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மூன்றாவது அணியின் தலைவராக, காங்கிரஸுடன் இணைந்து பிரதமராகும் திட்டமும் அவரிடம் இருக்கிறது.

‘பா.ஜ.க அல்லாத இந்தியா!’ - கே.சி.ஆரின் புதிய தேசியக் கட்சி பலன் தருமா?

பிரதமர் கனவா, பழிவாங்கலா?

தேசியத் தலைவர், பிரதமர் இரண்டும் கே.சி.ஆரின் பழைய கனவுகள்தான். ஆனாலும், தற்போதைய அதிரடி முன்னெடுப்புகளுக்கும் பா.ஜ.க எதிர்ப்புக்கும் காரணம், தெலங்கானாவில் பா.ஜ.க-வின் வளர்ச்சியே என்கிறார்கள் தெலங்கானா அரசியல் விமர்சகர்கள்.

‘2019 நாடாளுமன்றத் தேர்தலில், தன் மகள் கவிதாவைத் திட்டமிட்டு பா.ஜ.க தோற்கடித்தது, தன் மந்திரிசபையில் இருந்த எட்டலா ராஜேந்தர் பா.ஜ.க-வில் இணைந்தது, 2020 ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தலில் டி.ஆர்.எஸ் கட்சிக்கு இணையாக பா.ஜ.க பெற்ற வெற்றி, 2021 ஹுஸுராபாத் இடைத்தேர்தலில் பா.ஜ.க பெற்ற வெற்றி ஆகியவையே பா.ஜ.க-வின் மீதான கே.சி.ஆரின் காட்டமான விமர்சனங் களுக்குக் காரணம்’ என்கிறார்கள். ‘பா.ஜ.க மத்தியிலிருந்து தூக்கப்பட்டு வங்கக்கடலில் வீசப்பட வேண்டும்’ என்று ஒரு புறம் கே.சி.ஆர் தாக்க, அவரது கட்சியின் ஐடி விங் பா.ஜ.க-வைக் கடுமையான விமர்சனங்களால் கட்டம் கட்டிவருகிறது. தவிர, தெலங்கானாவுக்கு வந்த பிரதமரை வரவேற்காமல் தவிர்த்தது, ஆளுநர் தமிழிசைக்கு ஒத்துழைப்பு கொடுக்காதது என தடாலடி அரசியலைச் செய்துவருகிறார் கே.சி.ஆர். தெலுங்கு மட்டுமல்லாமல், ஆங்கிலம், இந்தி, உருது எனப் பல மொழிகள் தெரிந்தவர் என்பது தன்னுடைய தேசியத் தலைவர் கனவுக்கு உதவியாக இருக்கும் எனவும் நினைக் கிறார் கே.சி.ஆர்.

`பா.ஜ.க அல்லாத இந்தியா’ என அறைகூவல் விடுத்து, புதிய கட்சியைத் தொடங்கவிருக்கும் கே.சி.ஆருக்கு உடனடி யாகத் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார், ‘மதச்சார்பற்ற ஜனதா தள’ கட்சியின் தலைவரும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான குமாரசாமி. ஆனால், மற்ற மாநிலங்களில் அவருக்கு எந்த அளவுக்கு ஆதரவிருக்கும், காங்கிரஸ் அல்லாத மாற்று அணிக்கான சாத்தியம் எந்த அளவுக்குக் கைகூடும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்!