Published:Updated:

"இப்படி நடந்தால், இந்தியா ஆப்கானிஸ்தானைப்போல மாறிவிடும்..!" - எச்சரிக்கும் தெலங்கானா முதல்வர்

கே.சந்திரசேகர ராவ்

மத்திய அரசின் திறமையற்ற கொள்கையால் தெலங்கானா அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்திருக்கிறார்.

"இப்படி நடந்தால், இந்தியா ஆப்கானிஸ்தானைப்போல மாறிவிடும்..!" - எச்சரிக்கும் தெலங்கானா முதல்வர்

மத்திய அரசின் திறமையற்ற கொள்கையால் தெலங்கானா அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
கே.சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநிலம், மகபூபாபாத், கொத்தகுடெம் ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் திறந்துவைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தெலங்கானா மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியடையவில்லை. ஏனெனில், மத்தியிலுள்ள பா.ஜ.க அரசு, மாநில அரசுக்கு இணையாகச் செயல்படத் தவறிவிட்டது. மத்திய அரசின் திறமையற்ற கொள்கைகளால், தெலங்கானாவுக்கு மட்டும் ரூ.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் பொருளாதார வல்லுநர்கள், ரிசர்வ் வங்கி, சி.ஏ.ஜி மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பாஜக -மோடி, அமித் ஷா
பாஜக -மோடி, அமித் ஷா

நாட்டில் தண்ணீர், மின்சாரம் என ஏராளமான வளங்கள் இருந்தாலும், மத்திய அரசின் மோசமான கொள்கைகளால் மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பிரச்னைகளும், பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கின்றன. மத, சாதிவெறியை வளர்த்து, மக்கள் பிளவுபட்டால் ஆப்கானிஸ்தானைப்போல, தாலிபன் விவகாரம்போல, பயங்கரமான சூழ்நிலை ஏற்படும்.

நாடு இப்படி ஒரு குழப்பத்தை எதிர்கொண்டால், தாலிபன்களைப்போல ஆட்சியாளர்கள் மாறினால், முதலீடுகள் வருமா... வேலை கிடைக்குமா... இருக்கும் தொழில்கள் அப்படியே இருக்குமா... ஆனால், குழப்பங்கள் ஏற்பட்டு ஊரடங்கு உத்தரவு, துப்பாக்கிச்சூடு போன்ற சூழல் ஏற்பட்டு சின்னா பின்னமாகும்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்

இன்று நாட்டைத் தவறான பாதைக்குக் கொண்டுசெல்லும் முயற்சிகள் நடக்கின்றன என்பதை நீங்கள் அனைவரும் கவனித்துவருகிறீர்கள். எனவே, குறிப்பாக இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மத்தியில் முற்போக்கு சிந்தனையும், பாரபட்சமும் இல்லாத அரசு அமைந்தால்தான் நாடும் மாநிலமும் முன்னேற்றமடையும்" என்றார்.