Published:Updated:

``மோடியைப் போல திறமையற்ற பிரதமர் யாரும் இல்லை!" - தெலங்கானா முதல்வர் கேசிஆர் சாடல்

கே.சந்திரசேகர ராவ்

`மோடியைப் போன்ற பலவீனமான, திறமையற்ற பிரதமர் யாரும் இல்லை.' - சந்திரசேகர ராவ்

``மோடியைப் போல திறமையற்ற பிரதமர் யாரும் இல்லை!" - தெலங்கானா முதல்வர் கேசிஆர் சாடல்

`மோடியைப் போன்ற பலவீனமான, திறமையற்ற பிரதமர் யாரும் இல்லை.' - சந்திரசேகர ராவ்

Published:Updated:
கே.சந்திரசேகர ராவ்

தெலங்கானா முதல்வரும், டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், ``பிரதமர் மோடியைப் போல திறமையற்ற பிரதமர் யாரும் இல்லை" எனச் சாடியிருக்கிறார்.

நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சந்திரசேகர ராவ், ``இந்திரா காந்திக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அன்று அவர் எமர்ஜென்சியை அறிவிக்கும் அளவுக்குத் தைரியமாக இருந்தார். அது நேரடியாக, அறிவிக்கப்பட்ட ஒரு எமர்ஜென்சி. ஆனால் இன்று இந்தியாவில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி உள்ளது. இங்கு நான் இதைச் சொல்வேன், மோடியைப் போன்ற பலவீனமான, திறமையற்ற பிரதமர் யாரும் இல்லை.

மோடி
மோடி

வழக்கமான எரிபொருள் விலையுயர்வு, அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் மேலும் பல மோசடிகள், வெறுப்புக் குற்றங்கள் குறித்து மோடி பதில் கூற வேண்டும். மேலும், பிரதமர் மோடிக்கு மிக்க நன்றி. உங்களின் இரட்டை இன்ஜின் அரசாங்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், பா.ஜ.க அல்லது பா.ஜ.க அல்லாத எந்த இரட்டை இன்ஜின் அரசு வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். இந்தியாவுக்கு பா.ஜ.க அல்லாத இரட்டை இன்ஜின் அரசாங்கம்தான் தேவை என்பதை உண்மைகளும், புள்ளிவிவரங்களும் மிகத் தெளிவாகக் கூறுகின்றன" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்
டிவிட்டர்

மேலும் நுபுர் ஷர்மா விவகாரத்தில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்துப் பேசிய சந்திரசேகர ராவ், ``நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி பார்திவாலா ஆகியோருக்கு வணக்கம். இந்தியாவைக் காப்பாற்ற இதே மனப்பான்மையைக் கடைப்பிடிக்கவும். மேலும், இந்த துரோகிகள் மற்றும் சர்வாதிகாரிகளிடமிருந்து நீதித்துறை, நாட்டைக் காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.