தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்.பி-யுமான ஏ ரேவந்த் ரெட்டி, நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய போது, ``பிரதமர் மோடி தெலுங்கானாவைப் பற்றி அடிப்படையற்ற மற்றும் பொருத்தமற்ற குறிப்புகளைக் கூறி மாநிலத்தையும், மக்களையும் அவமதிக்கிறார். மோடி தெலுங்கானாவுக்கு எதிரானவர், தெலுங்கானா மாநிலம் அமைப்பதையே கேள்விக்குறியாக்கியவர். லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவில் வாக்கெடுப்பு நடத்தி மசோதா நிறைவேற்றப்படும் வரை கதவுகள் மூடப்பட்டிருக்கும் என்பதை கூட அறியாதவர். மோடி ஒரு படிக்காதவர்" எனக் கடுமையாக மோடியை விமர்சித்து ரேவந்த் ரெட்டி பேசினார்.

முன்னதாக, ``தெலுங்கானா மக்களின் போராட்டங்களை பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் அவமதிக்கிறார்" என தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் அமைச்சர் கே.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து பா.ஜ.க-வினர் இன்று தெலுங்கானாவில் போராட்டம் நடத்தினர்.