Published:Updated:

தெலங்கானா: 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கிலிருந்து அக்பருதீன் ஒவைசி விடுவிப்பு!

அக்பருதீன் ஒவைசி ( ட்விட்டர் )

பத்தாண்டுகளுக்கு முன்பு எம்.எல்.ஏ அக்பருதீன் ஒவைசிமீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து சிறப்பு விசாரணை அமர்வு நீதிமன்றம் அவரை விடுவித்து, தீர்ப்பு வழங்கியுள்ளது.

தெலங்கானா: 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கிலிருந்து அக்பருதீன் ஒவைசி விடுவிப்பு!

பத்தாண்டுகளுக்கு முன்பு எம்.எல்.ஏ அக்பருதீன் ஒவைசிமீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து சிறப்பு விசாரணை அமர்வு நீதிமன்றம் அவரை விடுவித்து, தீர்ப்பு வழங்கியுள்ளது.

Published:Updated:
அக்பருதீன் ஒவைசி ( ட்விட்டர் )

தெலங்கானா மாநில ஏ.ஐ.எம்.ஐ.எம்- கட்சியின் எம்.எல்.ஏ அக்பருதீன் ஒவைசி 2012 -ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிர்மல் நகரில் உரையாற்றியபோது இந்துக்களுக்கு எதிரான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக, ஒரு சமூகத்துக்கு எதிராக எரிச்சலூட்டும் மற்றும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அவர்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடும் அமளிக்குப் பிறகு அக்பருதீன் ஒவைசி கைதுசெய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

அக்பருதீன் ஒவைசி
அக்பருதீன் ஒவைசி
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத்துறை வழக்கை விசாரித்து 2016-ல் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்துவந்த நிலையில், அக்பருதீன் ஒவைசிமீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான சிறப்பு விசாரணை அமர்வு நீதிமன்றம் விடுவித்து, தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி
ட்விட்டர்

அக்பருதீன் ஒவைசி இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு அவரின் சகோதரர் ஏ.ஐ.எம்.ஐ.எம்-கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, "அனைவரது பிராத்தனைகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வழக்கை எதிர்த்து போராடிய வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கும் நன்றி" எனத் தெரிவித்தார்.

தெலங்கானா பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் ரெட்டி அனுகுலா
தெலங்கானா பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் ரெட்டி அனுகுலா
ட்விட்டர்

அக்பருதீன் ஒவைசி விடுவிக்கப்பட்டது  தொடர்பாக, தெலங்கானா பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் ரெட்டி அனுகுலா, "2012-ம் ஆண்டு இந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கில் எம்.எல்.ஏ விடுவிக்கப்பட்டது டி.ஆர்.எஸ் அரசின் தோல்வி. இதன் மூலம், கே.சி.ஆர் ஓர் இந்து துரோகி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது" எனக் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism