Published:Updated:

``இந்திய பண்பாட்டை கொரோனா உலகுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு!

ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

`ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் விஞ்ஞானிகள் ஊக்கம் அளித்ததால் இந்த குறுகிய காலத்தில் இந்தியா இவ்வளவு தடுப்பூசிகள் தயாரிக்க முடிந்தது. அதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி சொல்கிறேன்.'- தமிழிசை செளந்தரராஜன்

``இந்திய பண்பாட்டை கொரோனா உலகுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு!

`ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் விஞ்ஞானிகள் ஊக்கம் அளித்ததால் இந்த குறுகிய காலத்தில் இந்தியா இவ்வளவு தடுப்பூசிகள் தயாரிக்க முடிந்தது. அதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி சொல்கிறேன்.'- தமிழிசை செளந்தரராஜன்

Published:Updated:
ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துகொண்டனர். 10 நாள்கள் நடக்க உள்ள இந்த விழாவின்போது, அனைத்து நாள்களிலும் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் இந்து சமய மாநாடு நடைபெறும். இன்று தொடங்கிய 85-வது சமய மாநாட்டை தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கிவைத்து பேசுகையில், ``மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழாவில் நான் ஆண்டுதோறும் தவறாமல் கலந்து கொள்ள அன்னை அருள் பாலிக்கிறார். நான் இங்கு கவர்னராக வரவில்லை, அன்னை பகவதியின் மகளாய்தான் வந்துள்ளேன். கொரோனா முற்றிலும் தீரவில்லை. கொரோனா தீரும்வரை அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இது தற்காப்புதான், இப்போது இந்தியாவில் 160 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்பு நாங்கள் மருத்துவ மாணவர்களாக இருந்த சமயத்தில் தடுப்பூசிகள் வெளிநாட்டில் இருந்து வாருமா என எதிர்பார்த்து காத்திருந்த காலங்கள் உண்டு.

ஹைந்தவ சேவாசங்க மாநாட்டை தொடங்கிவைத்த கமிழிசை செளந்தரராஜன்
ஹைந்தவ சேவாசங்க மாநாட்டை தொடங்கிவைத்த கமிழிசை செளந்தரராஜன்

ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் விஞ்ஞானிகள் ஊக்கம் அளித்ததால் இந்த குறுகிய காலத்தில் இந்தியா இவ்வளவு தடுப்பூசிகள் தயாரிக்க முடிந்தது. அதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி சொல்கிறேன். மாநில அரசுகளும் தடுப்பூசியை மக்களுக்கு எடுத்து செல்கின்றன. வெளிநாடுகளில் ஒருவருக்கொருவரை சந்தித்தால் கை குலுக்கி கொள்வர். நம் இந்திய நாட்டில் கை தூக்கி கும்பிட்டு வணக்கம் சொல்வோம். இந்த பண்பாடு கொரோனா பரவலை தடுக்கிறது. இந்திய பண்பாடு உலகிலேயே சிறந்த பண்பாடாக உள்ளது. இந்த பண்பாட்டை கொரோனா உலகிற்கு கற்று கொடுத்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராகவும் அரசின் கடமைகளை செய்வது பகவதி அன்னையின் அருளால்தான். நான் அரசு கடமையை செய்வதற்கு அன்னை எனக்கு அருளிய சக்தியே ஆகும். அன்னையின் சக்தியால்தான் நான் இயங்குகிறேன். நான் கவர்னராக இயங்கினாலும், மக்கள் சேவையுடன் கூடிய அன்பு செய்யத்தான் ஆசை" என்றார்.

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர், ``உக்ரைனில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு சிக்கியுள்ள தெலுங்கானா, புதுச்சேரி மாணவர்களை மீட்க மத்திய அரசு வெளியுறவுத்துறைவுடன் தொடர்பில் இருந்துதான் வருகிறது. உலக நாட்டு அதிபர்களுடன் நம் பிரதமருக்கு நல்ல மதிப்பு உண்டு. மாணவர்கள் பத்திரமாக விமானம் மூலம் ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்களை பத்திரமாக அழைத்து வருவது அரசு கடமை" எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism