Published:Updated:

``அமித் ஷா தன் பெயரை `பொய்களின் பாட்ஷா' என மாற்றிக்கொள்ள வேண்டும்!" - கே.டி.ராமாராவ்

தெலங்கானா அமைச்சர் கே.டி.ஆர் ( ட்விட்டர் )

``இரட்டை இன்ஜின் அரசாங்கத்தையும், பிரதமர் நரேந்திர மோடியையும் மக்கள் நிராகரிக்கத் தயாராக இருக்கின்றனர்.'' - கே.டி.ராமாராவ்

``அமித் ஷா தன் பெயரை `பொய்களின் பாட்ஷா' என மாற்றிக்கொள்ள வேண்டும்!" - கே.டி.ராமாராவ்

``இரட்டை இன்ஜின் அரசாங்கத்தையும், பிரதமர் நரேந்திர மோடியையும் மக்கள் நிராகரிக்கத் தயாராக இருக்கின்றனர்.'' - கே.டி.ராமாராவ்

Published:Updated:
தெலங்கானா அமைச்சர் கே.டி.ஆர் ( ட்விட்டர் )

தெலங்கானா மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பிரஜா சங்க்ராம யாத்ரா' நிறைவுநாள் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், ``தெலங்கானாவில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள். இரண்டு லட்சம் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், எதையும் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை'' என ஆளும் அரசைச் சாடினார்.

அமித் ஷா
அமித் ஷா

இந்த நிலையில், டி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவரும், அமைச்சருமான கே.டி.ராமராவ், ``மத்திய அரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்குச் சென்றுவிட்டது. 'மிஷன் பகீரதா' திட்டத்துக்கு ரூ.25,000 கோடி வழங்கப்பட்டதாக திரு ஷா கூறுகிறார். அமித் ஷா தன் பெயரை `பொய்களின் பாட்ஷா' என மாற்றிக்கொள்ள வேண்டும், அவர் அமித் ஷா அல்ல, பொய்களின் பாட்ஷா. தெலங்கானா வளர்ச்சிக்கு மத்திய அரசின் பங்களிப்பு குறித்து அமித் ஷா பேச வேண்டும். பா.ஜ.க இந்தியாவைக் கடன் வலையில் தள்ளுகிறது. இரட்டை இன்ஜின் அரசாங்கத்தையும், பிரதமர் நரேந்திர மோடியையும் மக்கள் நிராகரிக்கத் தயாராக இருக்கின்றனர்'' என அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism