Published:Updated:

தெலங்கானா: சந்திரசேகர் ராவ் அரசை புகழ்ந்த அமைச்சர்... காலணிகள், நாற்காலியை தூக்கி வீசிய கும்பல்!

அமைச்சரின் கார் மீது காலணி வீச்சு ( ட்விட்டர் )

தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசை புகழ்ந்து பேசிய அமைச்சரின் கார் மீது காலணிகள், நாற்காலிகள் வீசப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று அரசியல் சார்பற்ற சமூக அமைப்பு ஒன்று பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த பொதுக்கூட்டத்தில் தெலங்கானா மாநில தொழிலாளர் துறை அமைச்சர் மல்லா ரெட்டி கலந்துகொண்டார். அப்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கூட்டத்திலிருந்த சிலர் ஆத்திரமடைந்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதையடுத்து, அமைச்சர் தன் உரையை முடித்துக்கொண்டு காரில் புறப்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த சிலர் அவரது காரின்மீது காலணிகளையும், நாற்காலிகளையும், தண்ணீர் பாட்டில்களையும் வீசினர். அதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதையடுத்து, போலீஸார் அவரைப் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

இது குறித்து பா.ஜ.க-வின் தேசிய ஐடி விங் தலைவர் அமித் மாள்வியா தனது ட்விட்டர் பக்கத்தில், ``சந்திரசேகர ராவின் தெலங்கானா அரசின் புகழ் இந்த நிலையில் தான் இருக்கிறது. தெலங்கானா அரசை புகழ்ந்த அமைச்சரின் பேச்சுக்கு எதிராக சிலர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இறுதியில் போலீஸார்வந்து அவரைப் பாதுகாப்புடன் வெளியேற செய்துள்ளனர்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism