Published:Updated:

ஆசியாவில் இரண்டாவது பெரிய ஆலமரம்... 800 ஆண்டுகள் பழைமை - ரூ.2 கோடி நிதி ஒதுக்கிய எம்.பி!

800 ஆண்டுகள் பழைமையான ஆலமரம்

தெலங்கானாவிலுள்ள 800 ஆண்டுகள் பழைமையான ஆலமரத்தைப் பாதுகாக்க அந்த மாநில எம்.பி ரூ. 2 கோடி நிதியை அறிவித்திருக்கிறார்.

ஆசியாவில் இரண்டாவது பெரிய ஆலமரம்... 800 ஆண்டுகள் பழைமை - ரூ.2 கோடி நிதி ஒதுக்கிய எம்.பி!

தெலங்கானாவிலுள்ள 800 ஆண்டுகள் பழைமையான ஆலமரத்தைப் பாதுகாக்க அந்த மாநில எம்.பி ரூ. 2 கோடி நிதியை அறிவித்திருக்கிறார்.

Published:Updated:
800 ஆண்டுகள் பழைமையான ஆலமரம்

தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் 800 ஆண்டுகள் பழைமையான ராட்சத ஆலமரம் 'பிள்ளாலமரி' இருக்கிறது. இந்த ஆலமரம், 2017-ல் கரையான் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, ராட்சத மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்தது. அதிலிருந்து, அந்த மரத்தைக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை, மாவட்ட நிர்வாகம் எடுத்துவருகிறது. இது ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ஆலமரம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பழைமையான ஆலமரத்தை பாதுகாக்க தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ராஜ்ய சபா எம்.பி ஜோகினபள்ளி சந்தோஷ் குமார், தன்னுடைய எம்.பி நிதியிலிருந்து ரூ.2 கோடி அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், ``அழியும் நிலையில் இருந்த பிள்ளாலமரி மரம் தற்போது பசுமையாகச் செழித்து வளர்ந்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தச் சிறப்புமிக்க மரத்தைப் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு. இந்த ராட்சத ஆலமரத்தைப் பாதுகாத்துவந்த மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி. தனது சொந்தக் குழந்தைகளைப்போல மரத்தைப் பாதுகாத்ததற்காக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கவுடுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மரத்தைப் பாதுகாக்க உப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் மரத்தின் அனைத்து வேர்களும் பராமரிக்கப்பட்டுவருகின்றன'' என்றார். 800 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் தற்போது புத்துயிர் பெறுகிறது.