Published:Updated:

`என் வாழ்க்கையில் முற்றுப்புள்ளியே கிடையாது'!- தெலங்கானா ஆளுநர் தமிழிசை

என் வாழ்க்கையில் என்றுமே முற்றுப்புள்ளி என்பது கிடையாது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

தமிழிசை
தமிழிசை

சென்னை ரெட்டேரில் தனியார் அறக்கட்டளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இந்த விழாவில் சினிமா பிரபலங்கள் சிலர் கலந்துக்கொண்டனர். நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் பேசிய தமிழிசை, “ மகாத்மா காந்தி பிறந்தநாள் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. நான் தெலங்கானா ஆளுநரானதிலிருந்து அங்கு தமிழ் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நான் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் இங்கு தெலுங்கு ஒலித்துக்கொண்டிருக்கிறது. தமிழுக்கு தெலுங்கு பாலமாக இருக்க வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியது வரவேற்கத்தக்க ஒன்று.

தமிழிசை
தமிழிசை

என் வாழ்க்கையில் என்றுமே முற்றுப்புள்ளி என்பது கிடையாது. கமா தான், அதேபோல் எனக்கு ஓய்வும் கிடையாது. நான் யாரையும் ஓய்வெடுக்கவும் விட மாட்டேன். கடுமையாக உழைத்து தேச பற்று இருந்தால், ஆளுநராக அமரலாம். மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட உங்களின் அன்பு சகோதரியாகவே இருக்க விரும்புகிறேன். உழைப்புக்கு மரியாதை கொடுப்பவர்கள் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தான்” எனக் கூறினார்.