Published:Updated:

ஆழியாறு குடிநீர்த் திட்டம் டெண்டர் ரத்து; சொல்லியடித்த செந்தில் பாலாஜி... சக்கரபாணி, நேரு அப்செட்டா?

ஆழியாறு குடிநீர் திட்டம்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு ட்ராக்கிலும், அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி ஒரு ட்ராக்கிலும் பயணித்ததால், இந்த விவகாரத்தில் தீர்வு எட்டுவதில் சிக்கல் நிலவியது.

ஆழியாறு குடிநீர்த் திட்டம் டெண்டர் ரத்து; சொல்லியடித்த செந்தில் பாலாஜி... சக்கரபாணி, நேரு அப்செட்டா?

அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு ட்ராக்கிலும், அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி ஒரு ட்ராக்கிலும் பயணித்ததால், இந்த விவகாரத்தில் தீர்வு எட்டுவதில் சிக்கல் நிலவியது.

Published:Updated:
ஆழியாறு குடிநீர் திட்டம்

பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டத்திலுள்ள ஆழியாறு அணையிலிருந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதிக்குக் குடிநீர் எடுத்துச் செல்ல ரூ.930 கோடி ஒதுக்கப்பட்டது. இது பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டம் மற்றும் திருமூர்த்தி நீர்த்தேக்கம் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆழியாறு குடிநீர்த் திட்டம்
ஆழியாறு குடிநீர்த் திட்டம்

விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்திருந்தபோது அவர் முன்னிலையிலேயே, “மக்கள் எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் இந்த அரசாங்கம் செயல்படுத்தாது” என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

அதேநேரத்தில் “ஆழியாறு ஒட்டன்சத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டம் கைவிடப்படவில்லை. நீர்வளத்துறை அமைச்சர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். அவர்களைச் சமாதானப்படுத்தித் தண்ணீர் எடுக்கப்படும்” என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். அமைச்சர்களின் இந்த மாறுபட்ட கருத்தால், விவசாயிகள் மேலும் கொதிப்படைந்தனர்.

நேரு
நேரு

இந்த விவகாரத்தில் திமுக அரசியல் செய்வதாகவும் விவசாயிகள் விமர்சித்திருந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு ட்ராக்கிலும், அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி ஒரு ட்ராக்கிலும் பயணித்ததால், இந்த விவகாரத்தில் தீர்வு எட்டுவதில் சிக்கல் நிலவியது.

இந்த நிலையில் இந்தத் திட்டத்தை அரசு மறுபரிசீலனைக்கு எடுத்திருப்பதாகவும், அதற்கான டெண்டர் ரத்துசெய்யப்படுவதாகவும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இது கொங்கு மண்டல விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. ஆனால், திமுக-வில் அரசியல் அனலைக் கிளப்பியிருக்கிறது. சீனியர் அமைச்சர்களான நேரு, சக்கரபாணி ஆகியோர் திட்டத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டினர்.

டெண்டர் ரத்து அறிவிப்பு
டெண்டர் ரத்து அறிவிப்பு

இதனால் அவர்களுக்குச் சாதகமாக முடிவு வரும் என்று ஒரு தரப்பில் எதிர்பார்ப்பு இருந்தது. திட்டத்தை மறுபரிசீலனைக்கு எடுத்திருப்பது செந்தில் பாலாஜிக்குத் தலைமையிடமுள்ள செல்வாக்கைப் பிரதிபலிக்கிறது என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.

இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், “கோவை மற்றும் கரூரில் அடிக்கடி பிரமாண்ட கூட்டங்கள் நடத்துவது, தேர்தல் வெற்றி போன்ற காரணங்களால் மிகக் குறுகியகாலத்திலேயே செந்தில் பாலாஜி முதல்வரின் குட்புக்கில் இடம்பிடித்துவிட்டார். இது சீனியர் அமைச்சர்களிடையே புகைச்சலைக் கிளப்பியது. முக்கியமாக, துறை அமைச்சர் நேருவையும் தாண்டி, கோவை மாநகராட்சி செந்தில் பாலாஜியின் கன்ட்ரோலில்தான் இருக்கிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜிக்கு செக் வைப்பதற்காகத்தான், அவர் திட்டம் நிறைவேற்றப்படாது எனக் கூறி, நேரு மாற்றுக் கருத்து தெரிவித்திருந்தார். திட்டத்தை மறுபரிசீலனைக்கு எடுத்து, டெண்டரை ரத்து செய்ததன் மூலம் நேரு, சக்கரபாணி உள்ளிட்டோர் அப்செட் ஆகியுள்ளனர். அதேநேரத்தில், செந்தில் பாலாஜியின் செல்வாக்கு மேலும் பலமடைந்திருப்பதை இது உணர்த்துகிறது” என்றனர்.