Published:Updated:

``தீவிரவாதத்தின் புதிய வடிவம் லவ் ஜிஹாத்; சனாதனத்தை அழிக்க முயல்கின்றனர்!" - மத்திய அமைச்சர்

பாஜக - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், லவ் ஜிஹாத் வடிவில் தீவிரவாதம் புதிய வடிவம் எடுத்திருப்பதாகவும், சனாதனத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

``தீவிரவாதத்தின் புதிய வடிவம் லவ் ஜிஹாத்; சனாதனத்தை அழிக்க முயல்கின்றனர்!" - மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், லவ் ஜிஹாத் வடிவில் தீவிரவாதம் புதிய வடிவம் எடுத்திருப்பதாகவும், சனாதனத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

Published:Updated:
பாஜக - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

அண்மையில், அஃப்தாப் என்பவர் தன் லிவ்-இன் பார்ட்னர் ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டிக் கொலைசெய்த சம்பவம் நாடளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒருபக்கம் இதில் கைதுசெய்யப்பட்ட கொலையாளி அஃப்தாபை போலீஸார் சிறையிலடைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதேசமயம் இன்னொருபக்கம் பா.ஜ.க-வைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் இதனை லவ் ஜிஹாத் என்று கூறிவருகின்றனர்.

அஃப்தாப்  - ஷ்ரத்தா
அஃப்தாப் - ஷ்ரத்தா

அதிலும் குறிப்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ``ஷ்ரத்தா போன்ற ஏராளமான பெண்கள் லவ் ஜிஹாத்தில் பலியாகியிருக்கின்றனர். லவ் ஜிஹாத் மூலம் இந்து பெண்களைக் குறிவைக்க நாட்டில் திட்டமிடப்பட்ட சதி நடக்கிறது" எனக் கூறி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இந்த நிலையில் அதே மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீண்டும் லவ் ஜிஹாத் வரிசையில் இன்னொரு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தின், முன்னாள் எம்.எல்.ஏ கிருஷ்ணானந்த் ராயின் நினைவு தினத்தை முன்னிட்டு முகமதாபாத்தில் நேற்று நிகழ்ச்சியொன்று நடைபெற்றது.

பாஜக - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
பாஜக - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

அதில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ``லவ் ஜிஹாத் வடிவில் தீவிரவாதம் புதிய வடிவத்தை எடுத்திருக்கிறது. மேலும், அது இந்தியாவில் சனாதன தர்மத்தை அழிக்க ஒரு மோசமான சதித்திட்டம் தீட்டுகிறது. எனவே சனாதனத்தை பின்பற்றுவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த சதித்திட்டத்தை முறியடிக்கவேண்டும்" என்று உரையாற்றினார்.

மேலும் மக்கள்தொகை பிரச்னை குறித்துப் பேசிய கிரிராஜ் சிங், ``சீனாவில் ஒரு நிமிடத்துக்கு 10 குழந்தைகள் பிறக்கின்றன. அதுவே இந்தியாவில் ஒரு நிமிடத்துக்கு 31 குழந்தைகள் பிறக்கின்றன. இதன் காரணமாகவே, வேகமாக வளர்ச்சியை இதுவரை மேற்கொள்ளமுடியவில்லை" என்று கூறினார்.