Election bannerElection banner
Published:Updated:

அறிவாலயத்தில் கூடிய கூட்டம்... சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்!

அறிவாலயம்
அறிவாலயம்

தேனாம்பேட்டை காவல் ஆய்வாலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்... காரணம் என்ன?

தமிழகத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தி.மு.க கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. தி.மு.க நிர்வாகிகள் பலரும் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களிலும் போஸ்டர் ஒட்டி கொண்டாட்டத்தை தொடங்கியிருந்தனர். இந்தநிலையில் காலை 11 மணியிலிருந்து தி.மு.க தொண்டர்கள் பலரும் அறிவாலயத்துக்கு படையெடுக்கத் தொடங்கினர்.

12 மணியளவில், அறிவாலயத்தில் ஏராளமான தி.மு.க-வினர் கூடி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதில் பலரும் மாஸ்க் அணியாவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து தேனாம்பேட்டை காவல் ஆய்வாலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

என்ன காரணம்?

இன்று பிற்பகலில் இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஐந்து மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில் ``கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகளையும் மீறி சில இடங்களில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். அப்படி விதிமுறைகளை மீறி கொண்டாட்டங்கள் நடைபெறும் பகுதிகளில், காவல் ஆய்வலாராக பணிபுரிபவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அவர்கள்மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Election Commission
Election Commission

இந்தநிலையில்தான், அண்ணா அறிவாலயத்தில் கூடிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய, தேனாம்பேட்டை காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி காட்டியிருக்கிறது தமிழக தேர்தல் ஆணையம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு