Published:Updated:

பா.ஜ.க அழுத்தத்தில் தினகரன்... டெல்லியால் இயக்கப்படும் கமல்!

தமிமுன் அன்சாரி
பிரீமியம் ஸ்டோரி
தமிமுன் அன்சாரி

தமிமுன் அன்சாரி தடாலடி

பா.ஜ.க அழுத்தத்தில் தினகரன்... டெல்லியால் இயக்கப்படும் கமல்!

தமிமுன் அன்சாரி தடாலடி

Published:Updated:
தமிமுன் அன்சாரி
பிரீமியம் ஸ்டோரி
தமிமுன் அன்சாரி
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில், மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து வெளியேறி, மனிதநேய ஜனநாயகக் கட்சியைத் தொடங்கிய தமிமுன் அன்சாரி, ஒரே மாதத்தில், ஜெயலலிதா விடமிருந்து இரண்டு சீட்கள் பெற்றார். அவற்றில் ஒன்றில் வெற்றிபெற்று ஐந்தாண்டுகள் எம்.எல்.ஏ-வாகவும் பூர்த்தி செய்யவிருக்கிறார். அன்று அவருக்கிருந்த அதிர்ஷ்டம், இன்று இல்லையோ என்னவோ... எங்குமே செல்ல முடியாமல் தி.மு.க-வுக்கு ஆதரவு மட்டும் கொடுத்திருக்கிறார். ஏன், என்ன நடந்தது... தமிமுன் அன்சாரியிடம் பேசினோம்.

‘‘தி.மு.க-வுக்கு ஆதரவு மட்டும் கொடுக்கக் காரணமென்ன... தொகுதி கேட்டும் அவர்கள் கொடுக்கவில்லையா?’’

‘‘பிப்ரவரி 26-ம் தேதி தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும், தொகுதிகளை ஒதுக்கக் கோரியும் கடிதம் கொடுத்தோம். எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பதால், மார்ச் 10-ம் தேதி அவசர செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டிப் பேசினோம். அதில் சிலர் மூன்றாவது அணிக்குச் செல்லலாம் என்றும், சிலர் தனித்துப் போட்டியிடலாம் என்றும் சொன்னார்கள். ஆனாலும், மதச்சார்பற்ற வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காக தி.மு.க-வை ஆதரிக்கலாம் என்ற முடிவை எடுத்தோம். அதன் அடிப்படையில் மார்ச் 11-ம் தேதி ஸ்டாலினைச் சந்தித்துப் பேசிய போது, தொகுதிகள் குறித்தும் பேசினோம். ஆனால், தொகுதி ஒதுக்க முடியாத சூழல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதனால், தண்டனைக் காலம் முடிந்தும் விடுவிக்கப்படாத சிறைவாசிகள் விடுதலை, பூரண மதுவிலக்கு, கல்வி, வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களுக்குப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட சச்சார் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துதல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல், சி.ஏ.ஏ-வுக்கு எதிரான தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றுதல் ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளைக் கடிதமாகக் கொடுத்துவிட்டு வந்தோம். சீட் கொடுக்காதது வருத்தமாகத்தான் இருக்கிறது. தனித்து நின்று எங்கள் வாக்குகள் பிரிந்து பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வென்றுவிடக் கூடாது என்பதால், நாங்கள் எடுத்த தியாகபூர்வ முடிவு இது.’’

பா.ஜ.க அழுத்தத்தில் தினகரன்... டெல்லியால் இயக்கப்படும் கமல்!

‘‘ம.ம.க-தான் உங்களைக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று முட்டுக்கட்டைப் போட்டதா?’’

‘‘எங்களுக்கும் அப்படியான செய்திகள் வருகின்றனதான்... எனினும், இது பற்றி மேற்கொண்டு பேச விரும்பவில்லை.’’

‘‘கமல், தினகரன் பக்கம் ஏன் செல்லவில்லை?’’

‘‘டி.டி.வி.தினகரன் மீது எப்போதுமே மரியாதை உண்டு. ஆனால், அவர் பா.ஜ.க அழுத்தங்களுக்கு ஆளாகக்கூடும் என்று சந்தேகமிருக்கிறது. அதேசமயம், கமலை டெல்லியில் உள்ளவர்கள்தான் பின்னாலிருந்து இயக்குகிறார்கள் என்று கருதுகிறோம்.’’

‘‘சிறுபான்மையினர் வாக்குகளை எதிர்பார்க்கும் தி.மு.க., சீட் கொடுப்பதில் பாரபட்சம் காட்டுவதாக நினைக்கிறீர்களா?’’

‘‘சிறுபான்மை மக்களின் மனநிலையைக் கருத்தில்கொண்டு, சிறுபான்மைக் கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கியிருக்க வேண்டும் என்பதே பலரது கருத்து.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism