Published:Updated:

அரசியலைவிட்டே விலகுவதுதான் ஓ.பி.எஸ்-ஸுக்கு நல்லது! - தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி

தங்க தமிழ்ச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
தங்க தமிழ்ச்செல்வன்

இப்போது நான் அ.தி.மு.க-வை விமர்சிப்பது நன்றாக இருக்காது. இருந்தாலும் சொல்கிறேன். அம்மாவுக்குப் பிறகு அங்கு யாரிடமும் தலைமைப் பண்பு இல்லை

அரசியலைவிட்டே விலகுவதுதான் ஓ.பி.எஸ்-ஸுக்கு நல்லது! - தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி

இப்போது நான் அ.தி.மு.க-வை விமர்சிப்பது நன்றாக இருக்காது. இருந்தாலும் சொல்கிறேன். அம்மாவுக்குப் பிறகு அங்கு யாரிடமும் தலைமைப் பண்பு இல்லை

Published:Updated:
தங்க தமிழ்ச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
தங்க தமிழ்ச்செல்வன்

“விரைவில் அ.தி.மு.க பிளவுபடும்” என்று 2021-ம் ஆண்டிலேயே ஜூ.வி பேட்டியில் சொல்லியிருந்தார் தங்க தமிழ்ச்செல்வன். அவர் அன்று சொன்னது இன்று நடந்திருக்கிறது. அடுத்து அ.தி.மு.க-வில் என்ன நடக்கும், ஓ.பி.எஸ்-ஸின் எதிர்காலம் என்னவாகும் போன்ற கேள்விகளுடன் அவரிடம் பேசினோம்.

“அ.தி.மு.க-வில் இன்று நடக்கும் பிரச்னைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இப்போது நான் அ.தி.மு.க-வை விமர்சிப்பது நன்றாக இருக்காது. இருந்தாலும் சொல்கிறேன். அம்மாவுக்குப் பிறகு அங்கு யாரிடமும் தலைமைப் பண்பு இல்லை. ஆட்சி, அதிகாரம் கிடைத்தால், எந்தத் திறமையும் இல்லாதவன்கூட அதிகாரம் பண்ண முடியும். ஆட்சி போன பிறகு மக்களவை, உள்ளாட்சித் தேர்தல் என அடுத்தடுத்து தோல்வி. கட்சியை ஸ்டடி பண்ண முடியவில்லை. காரணம் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் உட்பட அங்கே யாரிடமும் உண்மையும் இல்லை, திறமையும் இல்லை. அந்த அம்மாவிடம் நடித்து நடித்தே காலத்தை ஓட்டியவர்களால், இப்போது சுயமாக நடக்கக்கூட முடியவில்லை. ஓ.பி.எஸ்-ஸின் சொந்த மாவட்டத்திலேயே எல்லோரும் எடப்பாடி பக்கம் போகிறார்கள். மக்களையும் தொண்டனையும் விட்டுவிட்டு ஓ.பி.எஸ் குடும்பம் மட்டும் செல்வச் செழிப்பாக இருக்கிறது. எடப்பாடியோ பணத்தை அள்ளிவிடுகிறார். ‘யாருக்கும் பிரயோஜனம் இல்லை பன்னீர்செல்வத்தால்’ என்று எல்லோரும் இ.பி.எஸ் பக்கம் போகிறார்கள். இதுதான் இன்றைய நிலை.”

“தகுதி இல்லாமலா அ.தி.மு.க பொதுச்செயலாளராகி யிருக்கிறார் இ.பி.எஸ்?”

“கட்சியில் ஒருவர் தலைவராகவோ, பொதுச்செயலாளராகவோ வர வேண்டுமென்றால் தொண்டர்கள் ஒன்றுகூடி, ஒரே குரலில் தேர்வு செய்யக்கூடிய தகுதியோடு இருக்க வேண்டும். பணத்தையும் அதிகாரத்தையும் வைத்து பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்தால் அது நிலைக்காது. கலைஞருக்குப் பிறகு தளபதி தலைவராக வந்ததற்கு அவர்மீது தொண்டர்களுக்கு இருந்த அன்பும் நம்பிக்கையும்தான் காரணம். அந்தநிலை இ.பி.எஸ்-ஸுக்கு இல்லை. இ.பி.எஸ் இயக்கிய நாடகம்தான் முடிந்திருக்கிறது. உண்மையான முடிவு என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.”

“அமைதியானவர், பணிவானவர் என்று கருதப்பட்ட ஓ.பி.எஸ்., அ.தி.மு.க அலுவலகத்தில் அதிரடிகாட்டியிருக்கிறாரே?”

“அங்கே யாரிடமும் தலைமைப் பண்பு இல்லை என்பதை ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது இல்லாததால்தான் இன்று அ.தி.மு.க அலுவலகத்தை உடைத்து, கத்திகுத்தெல்லாம் நடந்து, கலவரம் செய்து... உள்ளே போகும் அளவுக்குத் துணிந்திருக்கிறார்கள். யார் பேச்சையும் யாரும் கேட்காத மோசமான நிலையில் கட்சி இருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.”

“ஓ.பி.எஸ்-ஸின் எதிர்காலம்..?”

“அவரிடம்தான் கேட்கணும் (பலமாகச் சிரிக்கிறார்). இவ்வளவு மோசமான நிலைமைக்குப் போன பிறகு, அரசியலைவிட்டே விலகுவதுதான் அவருக்கு நல்லது. டாப் லெவலில் இருந்துவிட்டு ஜீரோ லெவலுக்குப் போன ஒரு தலைவரை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.”

அரசியலைவிட்டே விலகுவதுதான் ஓ.பி.எஸ்-ஸுக்கு நல்லது! - தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி

“டி.டி.வி., சசிகலா ஆகியோர் இன்னமும் ‘அ.தி.மு.க-வின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் வருவார்கள்’ என்கிறார்களே?”

“அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. எடுத்தது எல்லாமே தவறான முடிவு. மக்கள் இனியும் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பா.ஜ.க-வை எதிர்த்து அவர்களால் அரசியல் பண்ணவும் முடியாது.”

“அ.தி.மு.க உட்கட்சி மோதலில் எடப்பாடியைப் பலவீனப்படுத்தவே, கொடநாடு விவகாரத்தை தி.மு.க கையில் எடுப்பதாகச் சொல்கிறார்களே..?”

“அப்படியெல்லாம் இல்லை. கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்தது உண்மை. ‘அம்மாவை தெய்வமாக வணங்குகிறோம்’ என்று சொல்லக்கூடிய இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆட்சியில் இருக்கும்போதே அவரது வீட்டில் கொலை, கொள்ளை நடக்கின்றன, ஃபைல்களெல்லாம் காணாமல் போகின்றன என்று சொன்னால், அந்தத் தவற்றைக் கண்டுபிடித்து மக்களுக்குச் சொல்வதுதானே அரசின் கடமை... அதை தி.மு.க அரசு செய்யும்!’’’

“தி.மு.க-வில் ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைக்காததால், நீங்கள் இ.பி.எஸ் அணிக்குப் போகப்போவதாக வந்த செய்தி உண்மையா?”

“முற்றிலும் தவறான தகவல். பதவிக்காகவோ, பணத்துக்காகவோ தங்க தமிழ்ச்செல்வன் என்றைக்கும் விலைபோக மாட்டான். இங்கு மதிப்பு, மரியாதையோடுதான் இருக்கிறேன். சத்தியமாக ராஜ்ய சபா எம்.பி வேண்டுமென்று நான் தளபதியிடம் கேட்டதில்லை. மிகப்பெரிய இயக்கம் தி.மு.க. மிசா காலத்திலிருந்து உழைத்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். நான் நேற்று வந்தவன். உடனே எம்.பி பதவி, மந்திரி பதவி வேண்டுமென்றால் எப்படி நடக்கும்... இன்னும் அதிக உழைப்பைக் காட்டுவேன். உழைப்புக்கேற்ற ஊதியத்தைத் தலைவர் கொடுப்பார் என்று நம்புகிறேன்.”

“ `அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு, தக்க தண்டனை பெற்றுத் தருவோம்’ என்றதே தி.மு.க... அது என்ன ஆனது?”

“இந்தப் பிரச்னையை பொறுமையாகத்தான் கையாள முடியும். தடாலடியாக நடவடிக்கை எடுத்தால், ‘தி.மு.க அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்கட்சிகளை அழிக்கிறது’ என்றும் இதே ஊடகம் சொல்லும்.”

“ஆதாரம் இருந்து நடவடிக்கை எடுத்தால், ஊடகம் ஏன் விமர்சிக்கப்போகின்றன?”

“அடுத்தடுத்து ரெய்டுகள் நடக்கின்றன. ஆதாரம் சிக்குகிறது. பொறுத்திருந்து பாருங்கள். தப்பு செய்தவர்களுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும். விட மாட்டோம். அது நூறு சதவிகிதம் உண்மை.”

“இப்படித்தான் பா.ஜ.க-வும் தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது... நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருந்துகொண்டு வெறுமனே குற்றம் மட்டுமே சாட்டுவது மிரட்டல் அரசியல் இல்லையா?”

“மிரட்டல் தொனியெல்லாம் தி.மு.க-வுக்குக் கிடையாது. நாங்கள் எடுப்பது சட்டப்படியான நடவடிக்கை. பா.ஜ.க செய்வதுதான் மிரட்டல் அரசியல்.”