Election bannerElection banner
Published:Updated:

தோற்றபோதும் துணை முதல்வரைக் கலங்கடித்த தங்க தமிழ்ச்செல்வன்! - போடி கள நிலவரம் #TNelections2021

தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்

2001-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காகத் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், அதற்குப் பின் இந்தத் தொகுதியில் இவரது செல்வாக்கு உயர்ந்தது.

மூன்று முறை எம்.எல்.ஏ., ஒரு முறை ராஜ்யசபா எம்.பி., 12 வருடங்கள் அதிமுக மாவட்டச் செயலாளர் என அதிகாரம் செலுத்திவந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு 2001, 2011, 2016-ம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காகத் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், அதற்குப் பிறகு இந்தத் தொகுதியில் இவரது செல்வாக்கு உயர்ந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் அணிக்குச் சென்றதால் எம்.எ.ல்ஏ பதவியை இழந்தார். பின்னர் அ.ம.மு.க சார்பில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதற்குப் பிறகு டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் திமுக-வில் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு மாநில அளவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்

தேனி வடக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே, சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியை விட்டுவிட்டு, போடி தொகுதியில் களமிறங்கினார். போடி சட்டமன்றத் தொகுதியில் இதுவரை ஆறு முறை அதிமுக-வும், மூன்று முறை திமுக-வும் வெற்றிபெற்றுள்ளன. 2011, 2016 ஆகிய இரு சட்டமன்றத் தேர்தல்களில் போடி தொகுதியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முக்குலத்தோர் சமூக வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் வகையில் உள்ளன. இந்த வாக்குகளைப் பெருமளவில் அதிமுக தன் வசம் வைத்திருந்தது. ஆனால் சசிகலா கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அந்த வாக்குகள் அமமுக-வால் சிதறடிக்கப்பட்டன. கூடவே தங்க தமிழ்ச்செல்வனுக்கு இந்தப் பகுதியில் ஏற்கெனவே இருந்த மக்கள் செல்வாக்கும், திமுக-வின் வாக்குகள் முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாலும், வெற்றி வாய்ப்பு சாத்தியம் என்றே கருதப்பட்டது.

அந்தச் சாதக அம்சமே நேற்று காலை தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோதும் காணப்பட்டது. அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்தவர், ஒரு சமயத்தில் பன்னீர்செல்வத்தைவிட முன்னிலையில் இருந்தார். தமிழகம் முழுக்கவே பரபரப்பாக போடி தொகுதியின் நிலவரத்தை கவனிக்கும் அளவுக்கு கடுமையான போட்டி நிலவியது. ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்த தங்க தமிழ்ச்செல்வன் இறுதியில் 11,055 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு