Published:Updated:

ஒன் பை டூ... அ.தி.மு.க-வின் சட்டமன்றப் புறக்கணிப்பு சரியா... தவறா?

தங்கம் தென்னரசு, ஆர்.பி.உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம் தென்னரசு, ஆர்.பி.உதயகுமார்

அவர்கள் எதிர்க்கட்சியாகத் தங்களுடைய கடமையிலிருந்து விலகிவிட்டனர்

ஒன் பை டூ... அ.தி.மு.க-வின் சட்டமன்றப் புறக்கணிப்பு சரியா... தவறா?

அவர்கள் எதிர்க்கட்சியாகத் தங்களுடைய கடமையிலிருந்து விலகிவிட்டனர்

Published:Updated:
தங்கம் தென்னரசு, ஆர்.பி.உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம் தென்னரசு, ஆர்.பி.உதயகுமார்

தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர், தி.மு.க

ஒன் பை டூ... அ.தி.மு.க-வின் சட்டமன்றப் புறக்கணிப்பு சரியா... தவறா?

“நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி இரண்டு நாள்களை அ.தி.மு.க புறக்கணித்தது மிகவும் தவறான ஒரு செயல். காரணம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் குறித்துப் பேசுவதற்கு மிக முக்கியமான வாய்ப்பு இருந்தது. ஆனால், வலுவில்லாத ஒரு காரணத்தைச் சொல்லி வேண்டுமென்றே சபையைப் புறக்கணித்துவிட்டார்கள். முதல்நாள், அதாவது புதன்கிழமை (18-ம் தேதி) காலை, பட்ஜெட்டுக்குச் சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தைப் பேசி, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதும் வெளிநடப்பு செய்தார்கள். சரி, அதைக்கூட தங்களின் எதிர்ப்பைப் பதிவுசெய்ய அப்படி நடந்துகொண்டார்கள் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கு அடுத்த நாளும் சபையைப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? அது எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும் நாள். மற்ற உறுப்பினர்களைவிட, எதிர்க்கட்சித் தலைவருக்கு அதிக நேரம் வழங்கப்படும். அ.தி.மு.க-வினருக்கு உண்மையிலேயே மக்கள்மீது அக்கறை இருந்திருந்தால், அந்த நாளைப் பயன்படுத்தி மக்கள் பிரச்னைகளைச் சபையில் எடுத்துவைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் எதிர்க்கட்சியாகத் தங்களுடைய கடமையிலிருந்து விலகிவிட்டனர்.’’

ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க.

“நாங்கள் சபையைப் புறக்கணித்தது சரிதான். காரணம், சட்டமன்றத்தில் நாங்கள் பேசுவதற்கான வாய்ப்பை தி.மு.க அரசு வழங்கவில்லை. ‘ஜீரோ ஹவரி’ல் எந்தவிதமான முக்கியப் பிரச்னையையும் எழுப்பலாம். எதிர்க்கட்சித் தலைவருக்கு அதற்கான முழு உரிமையும் இருக்கிறது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, முன்னறிவிப்பின்றி பல்வேறு விஷயங்களை ‘ஜீரோ ஹவரி’ல் பேசியிருக்கிறார். அதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அது குறித்து விவாதிக்கவும்பட்டிருக்கிறது. ஆனால், பிரச்னைகளை எழுப்புவதற்கே எங்களுக்குச் சட்டமன்றத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால்தான் மக்கள் மன்றத்தில் அதைப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 75 சட்டமன்ற உறுப்பினர்கள் அன்று சபையைப் புறக்கணித்தோம். நாங்கள், 1.5 கோடி மக்களால் தேர்வுசெய்யப்பட்டவர்கள். எங்களுக்கான முக்கியத்துவத்தை ஆளுங்கட்சி வழங்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின், மிக நீண்டகாலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். எதிர்க்கட்சிகளின் முக்கியத்துவத்தை, அவர்களின் ஆக்கபூர்வமான பணிகளை மிக நன்றாக உணர்ந்தவர். அவர் முதல்வராக இருக்கும்போது, எதிர்க்கட்சியை முடக்கும் இது போன்ற செயல்கள் ஆச்சர்யமாக இருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவதைவிட்டு, எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த அரசு செயல்படுகிறதோ என்கிற கவலை ஏற்பட்டிருக்கிறது.’’

ஒன் பை டூ... அ.தி.மு.க-வின் சட்டமன்றப் புறக்கணிப்பு சரியா... தவறா?