Published:Updated:

``அமைச்சர் பொன்முடி ஓசி என்று பேசியது வட்டார மொழி; அதனால் தவறில்லை" - சொல்கிறார் தனியரசு

பேட்டியளிக்கும் தனியரசு ( நா.ராஜமுருகன் )

"தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக இருக்கிறது. ஒன்று இரண்டு தவறுகள் நடந்தாலும், அதை சுட்டிக்காட்டினால் தமிழக உடனே அரசு திருத்திக் கொள்கிறது. மேலும், தமிழகத்தில் இரட்டை நிர்வாகத்தை கொண்டுவர தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சி செய்கிறார்" என்கிறார் தனியரசு.

கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் அந்த அமைப்பின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தனியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ``அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் பாதிக்கப்பட்டு இருக்கிறார். விதிப்படி, சட்டப்படி அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தான். ஏற்கனவே, அ.தி.மு.கவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட இரட்டை தலைமையை மறந்து, பொதுக்குழுவை கூட்டி ஓ.பி.எஸ்-ஐ வஞ்சித்து ஒற்றைத் தலைமை கோட்பாட்டை கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி. தற்போது ஒற்றைத் தலைமை குறித்து நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். அதனால், தலைமை பொறுப்பிற்காக அ.தி.மு.க ஊசலாடுகிறது. ஓ.பி.எஸ்-ஐ போலவே சசிகலாவும், தினகரனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களுக்கும் ஆதரவளிக்கிறேன்.

பேட்டியளிக்கும் தனியரசு
பேட்டியளிக்கும் தனியரசு
நா.ராஜமுருகன்

மீண்டும் நான்கு பேரும் இணைந்து செயல்பட்டால், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்தது போல, அ.தி.மு.க மிகவும் வலுவான கட்சியாக இருக்கும். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஜனநாயக மாண்பை மறந்து, சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு, அ.தி.மு.கவை அழிக்க நினைக்கிறார். அதனால், அவருக்கு எனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறேன்.

தமிழக அமைச்சர் பொன்முடி, இலவசமாக பேருந்தில் பெண்கள் செல்வதை வட்டார மொழியில் ஓசியில் செல்கிறார்கள் என பேசியது தவறில்லை. தமிழகத்தின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது. ஒன்று இரண்டு தவறுகள் நடந்தாலும், அதை சுட்டிக்காட்டினால் தமிழக உடனே அரசு திருத்திக் கொள்கிறது. மேலும், தமிழகத்தில் இரட்டை நிர்வாகத்தை கொண்டுவர தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சி செய்கிறார். அரசியல் பேசுகிறார். இதை கண்டித்து ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.