Published:Updated:

தஞ்சாவூர்: `ஜெயலலிதா போல கூறவில்லை..!' - திமுக மேயர் பேச்சால் சலசலப்பு; அதிமுக கவுன்சிலர்கள் ஆவேசம்!

தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் வாக்குவாதம்

``கேள்விக்கு பதில் கூற முடியாத மேயர் அதனை திசை திருப்பும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை ஒருமையில் சொல்லி, கூட்டத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றை பேசினார்." - அதிமுக கவுன்சிலர் மணிகண்டன்

தஞ்சாவூர்: `ஜெயலலிதா போல கூறவில்லை..!' - திமுக மேயர் பேச்சால் சலசலப்பு; அதிமுக கவுன்சிலர்கள் ஆவேசம்!

``கேள்விக்கு பதில் கூற முடியாத மேயர் அதனை திசை திருப்பும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை ஒருமையில் சொல்லி, கூட்டத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றை பேசினார்." - அதிமுக கவுன்சிலர் மணிகண்டன்

Published:Updated:
தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் வாக்குவாதம்

தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரண மாமன்றக் கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார், அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டில் உள்ள பிரச்னைகள் குறித்துப் பேசினர்.

தஞ்சாவூர் 
மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க மேயர் இராமநாதன்
தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க மேயர் இராமநாதன்

அ.தி.மு.க கவுன்சிலரான மணிகண்டன், `தஞ்சாவூர் கீழவாசல் சரபோஜி மார்க்கெட் வணிக வளாகத்தில் ஏலம் எடுத்த 48 கடைகாரர்கள் வாடகையை செலுத்த முடியவில்லை எனக் கூறி திருப்பி ஒப்படைப்பதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதே?' என்றார். அப்போது குறுக்கிட்ட மேயர், `அப்படியா!' என்றார். அதற்கு மணிகண்டன், `உங்களுடைய ஒப்புதல் இல்லாமலா, தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உங்களது கையெழுத்து தீர்மானத்தில் உள்ளதே' என கேள்வி எழுப்பினார்.

கூட்டத்தில் பேசும் அ.தி.மு.க கவுன்சிலர் மணிகண்டன்
கூட்டத்தில் பேசும் அ.தி.மு.க கவுன்சிலர் மணிகண்டன்

இதையடுத்து மேயர் இராமநாதன், `ஜெயலலிதா போல் நான் கையெழுத்து போடவில்லை எனக் கூறவில்லை' என்றதும், அ.தி.மு.க, அ.ம.மு.க கவுன்சிலர்கள் எழுந்து, `ஜெயலலிதாவை எதற்கு ஒருமையில் பேசினீர்கள்?' என கேட்டு கோஷமிட்டனர். பதிலுக்கு தி.மு.க கவுன்சிலர்களும் எழுந்து கூச்சலிட்டனர். இரு தரப்பினரும் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை ஊழல்வாதிகள் எனக் குறிப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் அமளி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேயர் இராமநாதன் மாமன்றக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டதாகக் கூறிவிட்டு சட்டென தனது இருக்கையிலிருந்து எழுந்து சென்றார். அதன் பிறகும் கூட்டரங்கில் அ.தி.மு.க, தி.மு.க கவுன்சிலர்கள் காரசாரமாக விவாதித்து கொண்டனர், இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

மேயர் சண்.இராம நாதன்
மேயர் சண்.இராம நாதன்

பின்னர் அ.தி.மு.க கவுன்சிலர் மணிகண்டன் செய்தியாளர்களிடம், ``கீழவாசல் சரபோஜி மார்கெட் வியாபாரிகள் கடையை ஒப்படைப்பது தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு பதில் கூற முடியாத மேயர் அதனை திசை திருப்பும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை ஒருமையில் சொல்லி அவர் மீது ஒரு வழக்கு இருந்தது அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் என கூட்டத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றை பேசினார்.

நாங்கள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது சர்க்காரியா கமிஷன் ஊழல் இருக்கிறது. இன்றைய முதலமைச்சராக இருக்க கூடியவர் மீதும்கூட ஒருகாலத்தில் புகார் கூறப்பட்டது என்றோம். அதனை மறுத்து மிரட்டும் விதமாக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சத்தம் போட்டனர். அதற்கு மேயர் உரிய பதிலை சொல்லாமல் கூட்டம் முடிந்துவிட்டது எனக் கூறி வெளி நடப்பு செய்துவிட்டார்.

தஞ்சாவூர் 
மாநகராட்சி
தஞ்சாவூர் மாநகராட்சி

மேயர் ஒவ்வொரு முறையும் மாமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மாமன்றத்தில் பதில் கூறாமல் சென்று விடுகிறார். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மேயர் இருக்கைக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. நீங்கள் கவனமாக பேசுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறோம். ஆனால் அவர் சிறுபிள்ளைத்தனமாக ஒவ்வொரு முறையும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இந்த நிலை தொடருமானால் மேயரைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்றார்.