பஞ்சாப் காங்கிரஸின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவர் சுனில் ஜாகர். இவர்மீது கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமை ஒழுக்காற்றுக்குழு அனைத்துக் கட்சிப் பதவிகளிலிருந்தும் சுனில் ஜாகரை நீக்கியது. அதனால் கோபமடைந்த சுனில் ஜாகர், கடந்த வாரம் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார்.
இது தொடர்பாக அவர், "மூன்று தலைமுறையாக நீடித்துவந்த காங்கிரஸுடனான உறவை முறிப்பது எளிதல்ல. நாங்கள் நல்ல காலங்களிலும், கெட்ட காலங்களிலும் காங்கிரஸுடன் இருந்தோம். நான் எனது தனிப்பட்ட நலனுக்காக அரசியலில் ஈடுபடாததால் பா.ஜ.க என்னை வரவேற்றது" எனக் கூறினார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், சுனில் ஜாகர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்-க்கு தனது ட்விட்டரில், "பஞ்சாப் மாநிலத்தில் குறைந்த விலையில் கடலைப் பருப்பு கொள்முதல் செய்வதற்கும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான கலால் வரியைக் குறைப்பதற்கும் மத்திய அரசின் உறுதிமொழியை ஒப்புக்கொண்டதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நன்றி. இதேபோல் வாட் வரியைக் குறைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.