Published:Updated:

``எங்கள் மக்களுக்கு உதவ முன்வந்த முதல்வருக்கு நன்றி” - இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா

ஜீவன் தியாகராஜா

”கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு இலங்கை மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என இலங்கை வடக்கு மகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்

``எங்கள் மக்களுக்கு உதவ முன்வந்த முதல்வருக்கு நன்றி” - இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா

”கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு இலங்கை மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என இலங்கை வடக்கு மகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்

Published:Updated:
ஜீவன் தியாகராஜா

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் அண்டை நாடான இலங்கைக்கு ரூ.123 கோடி மதிப்பில் அரிசி, கோதுமை, பால்பவுடர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசு சார்பில் வழங்கிட சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜீவன் தியாகரஜா
ஜீவன் தியாகரஜா

இதனை கொண்டு சேர்க்கும் வகையில் அனுமதி வழங்கிட மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கையும் விடுத்துள்ளது. இந்த நிலையில், இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழக அரசு, இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தமைக்கு தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் நிலவக்கூடிய இந்த கஷ்ட காலத்தில் மத்திய அரசு மூலமாக உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன்.

ஜீவன் தியாகராஜா
ஜீவன் தியாகராஜா

இந்தியாவிடமிருந்து தற்போது மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளது. தொடர்ந்து எந்த மாதிரி நடவடிக்கைகள் தேவை என்பதை அரசு பரிசீலனை நடத்தி வருகிறது. தற்போதைய சூழலில் இலங்கை மக்களுக்கு இந்திய அரசு உணவுகளை தடையின்றி வழங்குவதே சிறந்த உதவியாக இருக்கும். இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism