Published:Updated:

`அன்று இரவு நான் தூங்கவேயில்லை!’ - மோடி நெகிழ்ச்சி

5 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியாவின் மீதான அவர்களின் பார்வை மாறியதற்கு இங்கிருக்கும் 130 கோடி மக்கள்தான் காரணம்.

modi
modi

பிரதமர் நரேந்திரமோடி 7 நாள் அரசுப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற `ஹௌடி மோடி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான அமெரிக்கா வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அதிரபர் ட்ரம்பை சந்தித்துப்பேசினார். தொடர்ந்து, ஐ.நா அவையின் கூட்டத்தில் பேசினார். இந்நிலையில், தனது பயணத்தை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய பிரதமர் மோடிக்கு, டெல்லியில் பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

modi
modi

ஆயிரக்கணக்கானோர் டெல்லி ஏர்போர்ட்டில் திரண்டிருந்தனர். உலக அரங்கில் இந்தியாவின் பெருமை குறித்து பேச வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி எனத் தெரிவித்தார். "2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, நான் ஐக்கிய நாடுகள் அவைக்குச் சென்றிருந்தேன். ஆனால், இந்த முறை, இந்தியா மீதான அவர்களின் அணுகுமுறையில் ஒரு பெரிய மாற்றத்தை நான் கவனித்தேன்.

5 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியாவின் மீதான அவர்களது பார்வை மாறியதற்கு இங்கிருக்கும் 130 கோடி மக்கள்தான் காரணம். 3 ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 28-ம் தேதி இரவெல்லாம் நான் தூங்கவேயில்லை. இரவு முழுவதும் விழித்திருந்தேன். ஒவ்வொரு கணமும் தொலைபேசியிலிருந்து வரும் அழைப்புக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.

modi
modi
Vikatan

3 ஆண்டுகளுக்கு முன் துணிச்சலான நம் ராணுவ வீரர்களால் சர்சிகல் ஸ்டிரைக் (உரி தாக்குதல்) வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. நான் அதை இரவு நினைவு கூர்ந்தேன். ராணுவ வீரர்களுக்கு ஒரு சல்யூட். இதன் மூலம் இந்தியாவின் வலிமை உலகுக்கு உணர்ந்தப்பட்டுள்ளது” என்றார். மேலும், பிரதமரின் வருகையையொட்டி, கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. `பாரத் மாதா கி ஜெய்’ பாட்டு பாடி வரவேற்றனர். ``மோடி மாதிரியான ஒரு பிரதமரை நாம் அடைந்திருப்பதில் பெருமை கொள்கிறோம்” என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.