Published:Updated:

``எந்தக் கடவுளும் பிராமணரல்ல... அம்பேத்கர் கூறியதைத்தான் நான் சொன்னேன்!" - ஜே.என்.யு துணைவேந்தர்

ஜே.என்.யு துணைவேந்தர்

``இங்கு எந்தக் கடவுளும் பிராமணரல்ல. அது மட்டுமல்லாமல் சிவன்கூட பழங்குடியினத்தைச் சார்ந்தவராகவே இருக்க வேண்டும்." - ஜே.என்.யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ

``எந்தக் கடவுளும் பிராமணரல்ல... அம்பேத்கர் கூறியதைத்தான் நான் சொன்னேன்!" - ஜே.என்.யு துணைவேந்தர்

``இங்கு எந்தக் கடவுளும் பிராமணரல்ல. அது மட்டுமல்லாமல் சிவன்கூட பழங்குடியினத்தைச் சார்ந்தவராகவே இருக்க வேண்டும்." - ஜே.என்.யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ

Published:Updated:
ஜே.என்.யு துணைவேந்தர்

ஆகஸ்ட் 15 அன்று நாடு மொத்தமுமே, இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தைப் பெருமையுடன் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், ராஜஸ்தானில் 9 வயது பட்டியலின மாணவனொருவன், பள்ளியில் குடிநீர்ப் பானையைத் தொட்டதற்காக ஆசிரியர் அடித்ததால் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதோடு, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் இன்னும் தீண்டாமை இருந்துகொண்டுதான் இருக்கிறது என விமர்சனங்களும் எழுந்தன. அந்த வரிசையில் இது தொடர்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் பேசியது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

ஜே.என்.யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட்
ஜே.என்.யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட்

சாந்திஸ்ரீ, ``மானுடவியலின்படி, கடவுளின் தோற்றம் பற்றி பெரும்பாலோனோர் அறிந்திருக்க வேண்டும். மேலும், இங்கு எந்தக் கடவுளும் பிராமணரல்ல. அதுமட்டுமல்லாமல் சிவன்கூட பழங்குடியினத்தைச் சார்ந்தவராகவே இருக்க வேண்டும். மேலும், மனுதர்மத்தின்படி எல்லாப் பெண்களும் சூத்திரர்கள்தான். திருமணத்தின் மூலம் மட்டுமே பெண்களுக்குத் தங்களின் கணவன் அல்லது தந்தையின் சாதி தொடர்புபடுகிறது" என்று கூறியிருந்தார். சாந்திஸ்ரீயின் இந்தக் கருத்து விவாதப்பொருளானது.

அம்பேத்கர்
அம்பேத்கர்

இந்த நிலையில், சட்டமேதை அம்பேத்கரை மேற்கோள்காட்டி தன் கருத்துக்கு விளக்கமளித்திருக்கும் சாந்திஸ்ரீ, ``அம்பேத்கர் மற்றும் பாலின நீதி, சீருடை சிவில் கோடு (uniform civil code) டீகோடிங் பற்றிதான் நான் பேசிக்கொண்டிருந்தேன். அதனால் அம்பேத்கரின் சிந்தனை என்னவென்பதை நான் பகுப்பாய்வு செய்யவேண்டியிருந்தது. மேலும், அம்பேத்கர் மனுதர்மம் குறித்து நிறைய எழுதினார். இதையெல்லாம் அவர்தான் சொன்னார். அவருடைய கருத்தை நான் பகுப்பாய்வு மட்டுமே செய்தேன். அம்பேத்கர் தனது புத்தகங்களில் கூறியதைத்தான் நான் விளக்கினேன். மேலும் இவை என்னுடைய கருத்துகள் இல்லை. அது மட்டுமல்லாமல் அம்பேத்கரைப்போலவோ... அவரைப்போல பெரியவரோ அல்ல. ஒரு நல்ல கல்வியாளராக, பாலின நீதி பற்றிய அவரின் கருத்துகளைத்தான் நான் பகுப்பாய்வு செய்தேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.