Published:Updated:

``மதுக் கொள்கை ஊழல் சர்ச்சை - பாஜக-மீது அவதூறு வழக்கு தொடர்வேன்!’’ - சந்திரசேகர ராவ் மகள்

தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா ( ட்விட்டர் )

``டெல்லியின் மதுக் கொள்கை ஊழல் வழக்கில், பா.ஜ.க கூறியதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை." - தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா

``மதுக் கொள்கை ஊழல் சர்ச்சை - பாஜக-மீது அவதூறு வழக்கு தொடர்வேன்!’’ - சந்திரசேகர ராவ் மகள்

``டெல்லியின் மதுக் கொள்கை ஊழல் வழக்கில், பா.ஜ.க கூறியதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை." - தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா

Published:Updated:
தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா ( ட்விட்டர் )

டெல்லியின் மதுக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக, ஆம் ஆத்மி அமைச்சரும், டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாமீது சி.பி.ஐ நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி தலைவர்கள் பலரும் பா.ஜ.க-வைச் சாடிவருகின்றனர். அதேசமயம் பா.ஜ.க-வும் ஆம் ஆத்மியை விமர்சித்துவருகிறது.

பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா
பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா
ட்விட்டர்

இதற்கிடையில், பா.ஜ.க தலைவர்கள் பர்வேஷ் வர்மா, மஞ்சிந்தர் சிங் சிர்சா, ``மதுபான மாஃபியா மற்றும் ஆம் ஆத்மி அரசுக்கிடையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா மத்தியஸ்தராகச் செயல்பட்டார்" என நேற்று செய்தியாளர்களிடம் குற்றம்சாட்டினர்.

தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா
தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா
ட்விட்டர்

இந்த நிலையில், பா.ஜ.க-வின் இத்தகைய குற்றச்சாட்டை மறுத்த கவிதா, ``என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றவை. டெல்லியின் மதுக் கொள்கை ஊழல் வழக்கில், பா.ஜ.க கூறியதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அனைத்து ஏஜென்சிகளும் அவர்களின் கையிலிருக்கின்றன. அவர்களுக்கு என்ன விசாரணை தேவையோ அதை அவர்களால் செய்ய முடியும். மேலும், விசாரணைக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம். ஆனால், இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். போராளிகளின் குடும்பம் நாங்கள், இதில் நிச்சயம் போராடுவோம். நமது முதல்வர் சந்திரசேகர ராவ், மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிப்பதில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாலேயே, எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த பா.ஜ.க இதைச் செய்கிறது" என இன்று கூறியிருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக பா.ஜ.க-மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் கவிதா தெரிவித்திருக்கிறார்.