Published:Updated:

`மொத்தம் 100 பேருக்குக் குறி!’ - எஸ்.பி.வேலுமணி ரெய்டு பின்னணி..!

எஸ்.பி.வேலுமணி வீடு
எஸ்.பி.வேலுமணி வீடு

வேலுமணி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, டெண்டர் விதிகளை மீறியதுதான் முக்கியக் குற்றச்சாட்டு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முன்னாள் அமைச்சர் வேலுமணி சம்பந்தப்பட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலை முதலே ரெய்டு நடத்திவருகின்றனர். வேலுமணியின் கோவை வீடு, தொண்டாமுத்தூர் பண்ணை வீடு, வேலுமணி சகோதரர் அன்பரசன் வீடு, வடவள்ளி சந்திரசேகர், கே.சி.பி.சந்திரபிரகாஷ், கோவை மாநகராட்சி முன்னாள் துணை ஆணையர் மதுராந்தகி இல்லம் என தமிழ்நாடு முழுவதும் 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்திவருகின்றனர்.

அறப்போர் இயக்கம், தி.மு.க கொடுத்த புகாரின் அடிப்படையில் வேலுமணி, அன்பரசன், சந்திரசேகர், சந்திரபிரகாஷ் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்டாலும், அ.தி.மு.க ஆட்சியில் அந்தப் புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அந்த ஆவணங்கள் தூசுதட்டப்பட்டன. கடந்த சில வாரங்களாக விசாரணை தீவிரமடைந்துவந்தது. இதனால் வேலுமணியும் ரெய்டை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்னைத் தொட முடியாது!” - சவால்விடும் வேலுமணி

அவர் எதிர்பார்த்துபோலவே, லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று ரெய்டைத் தொடங்கினர். கடந்த 2014 முதல் 2018 வரை சென்னை மாநகராட்சியில் 464 கோடி ரூபாய் மற்றும் கோவை மாநகராட்சியில் 346 கோடி ரூபாய்க்கான டெண்டர்கள் வேலுமணிக்கு வேண்டப்பட்ட (அவரது சகோதரர் அன்பரசன் உட்பட) நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. வேலுமணி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, டெண்டர் விதிகளை மீறியதுதான் முக்கியக் குற்றச்சாட்டு.

இதனால் அன்பரசனின் செந்தில் அண்ட் கோ, கே.சி.பி.இன்ஜினீயர்ஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிகர லாபம் இந்தக் குறிப்பிட்ட காலத்தில் பல மடங்கு உயர்ந்துள்ளன. எஸ்.பி.பில்டர்ஸ், கான்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா, கான்ஸ்ட்ரோமால் கூட், ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லர்ஸ், ஆலயம் ஃபவுண்டேசன், வைடூரியா ஹோட்டல்ஸ், ரத்ன லட்சுமி ஹோட்டல்ஸ் என்று இவர்களின் நெட்வொர்க்கிலுள்ள அனைத்து நிறுவனங்கள் மீதும் ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ள கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் குறிவைத்துள்ளனர். வேலுமணி அண்ட் கோ சமீபத்தில் வாங்கிய சொத்து விவரங்களும் தோண்டித் துருவப்பட்டுவருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இந்தச் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. உள்ளாட்சித் தேர்தலில் எங்களை சோர்வடைய வைக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த நடவடிக்கைகள் எங்களை சோர்வடைய வைக்காது. ஒப்பந்தங்களை நேரடியாக அமைச்சர் கொடுப்பதில்லை. அதிகாரிகளுக்குத்தான் தெரியும்.

`மொத்தம் 100 பேருக்குக் குறி!’ - எஸ்.பி.வேலுமணி ரெய்டு பின்னணி..!

இந்தச் சோதனையால் அ.தி.மு.க., கோவை மாவட்டத்தில் இன்னும் வலுவடையும். மாலை வரை நடந்தால் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள். சோதனையால் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் ஒரே நேரத்தில் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது்.

ஆட்சியும் அதிகாரமும் திமுக-விடம் இருப்பதால் சோதனை நடத்துகின்றனர். இந்தப் போக்கை கைவிடவில்லையெனில் திமுக இன்னும் பின்னடைவைச் சந்திக்கும். திமுக கொடுத்த 506 வாக்குறுதிகளில் ஓன்றிரண்டை மட்டுமே நிறைவேற்றியிருக்கின்றனர். வெள்ளை அறிக்கையில் எதுவும் இல்லை. அது அவர்களுக்கு சிவப்பு அறிக்கையாக, எச்சரிக்கையாக மாறிவிட்டது. திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என்றார் காட்டமாக.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு