Published:Updated:

`பா.ஜ.க-வின் கதவு மட்டும் முழுமையாகத் திறக்கப்பட்டால்?’ - எதிர்க்கட்சிகளை விளாசிய அமித்ஷா

சத்யா கோபாலன்

பா.ஜ.க-வின் கதவுகள் திறக்கப்பட்டிருந்தால் காங்கிரஸ் போன்ற பிறகட்சிகளில் ஒருவர்கூட இருக்க மாட்டார்கள் என அமித்ஷா பேசியுள்ளார்.

Amit shah
Amit shah ( Twitter/@Dev_Fadnavis )

இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் 300 இடங்களுக்கும் அதிகமாகக் கைப்பற்றி பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. முன்னதாக பா.ஜ.க தலைவராக இருந்த அமித்ஷா இந்த முறை உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். பா.ஜ.க பொறுப்பேற்ற பிறகு, நாடு முழுவதும் உள்ள பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க-வில் இணைந்து வருகின்றனர்.

Mahajanadesh yatra
Mahajanadesh yatra
Twitter/@Dev_Fadnavis

சமீபத்தில் நடந்த பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கையில் பல லட்சம் பேர் அந்தக் கட்சியில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நடத்தி வரும் ’மகாஜனதேஷ் ‘ (Mahajanadesh ) என்ற பேரணியின் முதல்கட்ட நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

` இது 10 ஆண்டுகால பகை!' - சிதம்பரத்தை ஏன் குறிவைக்கிறார் அமித் ஷா?

அதில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, ``மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க-வின் கதவுகள் இன்னும் முழுமையாகத் திறக்கவில்லை. இம்மாநில பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த பாட்டீல் (Chandrakantda Patil) அந்தக் கதவுகளைத் திறக்காமல் நான் பார்த்துக்கிறேன். ஒருவேளை பா.ஜ.க-வின் கதவுகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தால் காங்கிரஸின் ப்ரித்விராஜ் சாவன் மற்றும் தேசியவாத காங்கிரஸின் சரத்பவாரை தவிர அந்தக் கட்சிகளில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

Mahajanadesh yatra
Mahajanadesh yatra
Twitter/@Dev_Fadnavis

இந்த இரு கட்சிகளும் சுமார் 15 ஆண்டுகள் மகாராஷ்ட்ராவை ஆட்சி செய்தன. ஆனால், அவர்கள் சில குடும்பங்களின் வளர்ச்சி மீது மட்டுமே அக்கறை காட்டினர். தற்போது இங்கு ஆட்சி செய்து வரும் தேவேந்திர பட்னாவிஸ் ஏழை மக்களின் நிலைக்காகக் கவலைப்படுகிறார். மத்தியில் நரேந்திர மோடியும் மகாராஷ்ட்ராவில் தேவேந்திர பட்னாவிஸும் இருப்பது சிறப்பான ஒன்று” எனக் கூறினார். பின்னர் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது பற்றிப் பேசிய அவர், ``ராகுல் காந்தியின் பேச்சை முன்வைத்து பாகிஸ்தான் இந்தியாவைக் குறிவைக்கிறது’' எனத் தெரிவித்துள்ளார்.