Published:Updated:

சிபிஐ ரெய்டு: `எதையும் கண்டுபிடிக்கவில்லை, கைப்பற்றவுமில்லை; சோதனை நேரம் சுவாரஸ்மானது’ - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

``சோதனையிட வந்த குழு எனக்கு ஒரு எஃப்.ஐ.ஆர்-ஐ காட்டியது, அதில் நான் குற்றம்சாட்டப்பட்டவனாகக் குறிப்பிடப்படவில்லை. மேலும் தேடுதல்குழு இதுவரை எதையும் கண்டுபிடிக்கவுமில்லை, கைப்பற்றவுமில்லை." - ப.சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் திடீரென சி.பி.ஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். சென்னை, மும்பை, டெல்லியில் ப.சிதம்பரத்துக்குச் சொந்தமான ஏழு இடங்களில் சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக இந்தச் சோதனை நடைபெற்றதாக சொல்லப்பட்டது. ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக விசாக்கள் வழங்கப்பட்டது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் மீது புதிதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக காலையில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, ``எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்... இதுவரை எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன்" என கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்திருந்தார்.

இந்த நிலையில் ப. சிதம்பரமும் தற்போது, ``இன்று காலை சென்னையிலுள்ள எனது இல்லத்திலும், டெல்லியில் உள்ள எனது அதிகாரபூர்வ இல்லத்திலும், சி.பி.ஐ குழுவினர் சோதனை நடத்தினர். இந்தக் குழு எனக்கு ஒரு எஃப்.ஐ.ஆர்-ஐ காட்டியது, அதில் நான் குற்றம்சாட்டப்பட்டவனாகக் குறிப்பிடப்படவில்லை. மேலும் தேடுதல்குழு இதுவரை எதையும் கண்டுபிடிக்கவுமில்லை, கைப்பற்றவுமில்லை. சோதனை நடைபெறும் நேரம் சுவாரஸ்மானது என்பதை இங்கு நான் சுட்டிக்காட்டலாம்" என ட்விட்டரில் தற்போது பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism