Published:Updated:

அன்னா ஹசாரே பரிந்துரை ஏற்பு; லோக் ஆயுக்தாவின் கீழ் வருகின்றனர் மகாராஷ்டிரா முதல்வர், அமைச்சர்கள்!

மகாராஷ்டிரா முதல்வர் - துணை முதல்வர்

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் பரிந்துரையை ஏற்று லோக் ஆயுக்தாவின் கீழ் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர்.

அன்னா ஹசாரே பரிந்துரை ஏற்பு; லோக் ஆயுக்தாவின் கீழ் வருகின்றனர் மகாராஷ்டிரா முதல்வர், அமைச்சர்கள்!

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் பரிந்துரையை ஏற்று லோக் ஆயுக்தாவின் கீழ் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:
மகாராஷ்டிரா முதல்வர் - துணை முதல்வர்

மகாராஷ்டிராவில் ஊழலுக்கு எதிராகப் போராடிவந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். லோக் ஆயுக்தாவில் முதல்வர் மற்றும் அமைச்சர்களையும் சேர்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நாக்பூரில் தொடங்கியிருக்கிறது. முன்னதாக இதற்காக அமைச்சர்கள் உட்பட அனைவரும் நாக்பூருக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை அமைக்க வேண்டுமென்ற அன்னா ஹசாரேவின் பரிந்துரையை ஏற்பது என்று முடிவுசெய்யப்பட்டது. இது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், ``அன்னா ஹசாரே தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டபடி லோக் ஆயுக்தாவை அமைப்பது என்று அமைச்சரவை முடிவுசெய்திருக்கிறது. நாங்கள் மிகவும் வெளிப்படையாக ஆட்சி நடத்துகிறோம்.

அன்னா ஹசாரே
அன்னா ஹசாரே

ஊழல் இல்லாத மகாராஷ்டிராவை உருவாக்குவோம். எனவேதான் லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வர முடிவுசெய்திருக்கிறோம். அன்னா ஹசாரே லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கோரினார். இதையடுத்து எங்களது ஆட்சியில் அன்னா ஹசாரே தலைமையில் இதற்காக ஒரு கமிட்டி அமைத்தோம். மகாவிகாஸ் அகாடி ஆட்சியில் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் வந்தவுடன் அதை விரைவுபடுத்தியிருக்கிறோம். லோக் ஆயுக்தா கமிட்டி ஐந்து உறுப்பினர்களைகொண்டதாக இருக்கும். இதில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இடம்பெற்றிருப்பார்கள். ஊழலை எதிர்த்து போராட நாங்கள் புதிய சட்டத்தை உருவாக்குகிறோம்" என்று தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டால், அரசுக்கு எதிராகவும், நிர்வாகத்துக்கு எதிராகவும் மக்கள் அந்த கமிட்டியில் தங்களது குறைகளைத் தெரிவிக்க முடியும். சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, ஆளுநர் லோக் ஆயுக்தா கமிட்டியை நியமிப்பார். நாட்டிலேயே முதன்முறையாக மகாராஷ்டிராவில் லோக் ஆயுக்தா சட்டம் அமலுக்குவருகிறது. இதில் முதல்வர், அமைச்சர்கள் மீதான புகார்களையும் தெரிவிக்கலாம். கமிட்டி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.