Published:Updated:

``டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்!'' - தி.மு.க. ``உங்கள் மது ஆலைகளை மூடுங்கள்!'' - அ.தி.மு.க.

டாஸ்மாக் மது
டாஸ்மாக் மது

''அ.தி.மு.க ஆட்சியில்தான் தி.மு.க-வினரின் மது ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஆக, இதிலெல்லாம் இவர்கள் கட்சிப் பாகுபாடு பார்ப்பது இல்லை'' என்று உடைத்துப் பேசுகிறார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபண்ணா.

'டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டதற்கு தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், ஆளுங்கட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, இக்கட்சியினர் கறுப்பு சின்னம் அணிந்து அவரவர் வீட்டு வாசலில் நின்று போராட்டமும் நடத்தினர்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

''மது உற்பத்தித் தொழிற்சாலைகளைப் பெருமளவில் நடத்திவருபவர்களே தி.மு.க கட்சியைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள்தான். தங்கள் தொழிற்சாலைகளில் இருந்து மதுவை உற்பத்தி செய்து, டாஸ்மாக் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவரும் இந்தத் தலைவர்களே, இப்போது மது விற்பனைக்கு எதிராகப் போராட்டம் செய்துவருவது, நல்ல காமெடி!'' என்று கொளுத்திப்போடுகிறது அ.தி.மு.க தரப்பு!

‘இது, நியாயமான கேள்விதானே, இதற்கு உங்கள் பதில் என்ன?’ என்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் கேட்டோம்...

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)

''மது எந்த உருவத்தில் வந்தாலும், 'கூடாது' என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை.

ஊரடங்கைக் கடைப்பிடித்துவரும் இந்நேரத்தில், டாஸ்மாக் கடைகளைத் திறந்தது தவறு. அத்தகைய தவற்றைச் செய்திருக்கும் அ.தி.மு.க-வுக்கு, தி.மு.க-வை குறைசொல்ல எந்தத் தகுதியும் கிடையாது.''

ஜவாஹிருல்லா - முத்தரசன்
ஜவாஹிருல்லா - முத்தரசன்

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

''மது ஆலைகளை மூடவேண்டும்; மூடக்கூடாது என்பதல்ல இப்போதைய பிரச்னை. 'குறைந்தபட்சம் இந்த கொரோனா காலகட்டத்திலாவது கடைகளைத் திறக்க வேண்டாம்; மூடுங்கள்' என்பதுதான் எங்கள் கோரிக்கை. அதையும்கூட, இப்படி திசை திருப்பாதீர்கள்!''

மல்லை சத்யா (ம.தி.மு.க)

''மதுத் தொழிற்சாலைகளை மூடச்சொல்லுங்கள் என்று சொல்லி ஆளுங்கட்சி பிரச்னையை திசை திருப்புவது, அரசியல்!''

``உணர்வைக் காட்டமுடியாததே உச்சக்கட்ட வலி!" - செவிலியர் தமிழ்ச்செல்வி
மல்லை சத்யா - மா.சுப்பிரமணியன்
மல்லை சத்யா - மா.சுப்பிரமணியன்

முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் (தி.மு.க)

'’தி.மு.க-விலுள்ள சில தலைவர்கள் மது ஆலைகளை நடத்திவருகிறார்கள் என்றால்... அவர்கள் இன்று, நேற்றா இந்த ஆலைகளைத் திறந்திருக்கிறார்கள்? தொழில்ரீதியாக ஆண்டாண்டு காலமாக இந்தத் தொழிற்சாலைகளை நடத்திவருகிறார்கள். தி.மு.க தலைவர்களது ஆலைகளிலிருந்து மட்டும்தான் டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு எடுக்கப்படுகிறதா? மொத்தக் கொள்முதலில் 80-லிருந்து 90 சதவிகித சரக்கு கொள்முதல், அ.தி.மு.க தரப்பிலான மிடாஸ் ஆலையிலிருந்துதானே எடுக்கப்படுகிறது?''

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

''இப்போதைய பிரச்னை, மதுவிலக்கு வேண்டுமா வேண்டாமா என்பதுதான்; ஆலைகளை நடத்தணுமா, நடத்தக்கூடாதா என்பதல்ல. 'புகைப்பிடிப்பது தவறு' என்று அரசுதான் அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து, 'சிகரெட் கம்பெனியை மூடுங்கள்' என்று நாங்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க முடியாது.’’

கே.பாலகிருஷ்ணன் - வன்னி அரசு
கே.பாலகிருஷ்ணன் - வன்னி அரசு

வன்னியரசு (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

''டாஸ்மாக்கை திறந்துவிட்டவர்கள், மக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வழியில்லாமல், இப்படி ஏட்டிக்குப் போட்டியாகக் கேட்டு, எஸ்கேப்பாக நினைக்கிறார்கள். எரிகிற கொள்ளியைப் பிடுங்கினால், கொதிக்கிற கொதி தானாகவே அடங்கிவிடும் என்பார்கள். சரக்கு கொள்முதல் செய்வதை நீங்கள் நிறுத்தினால், தானாகவே ஆலைகளும் உற்பத்தியை நிறுத்திவிடப் போகிறார்கள்!''

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி)

''தார்மிக அடிப்படையில் மது ஆலைகளை மூட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கு முன்னால் 'பூரண மதுவிலக்கு' என்று தமிழ்நாட்டில் அறிவியுங்கள். அதன்பிறகு, தி.மு.க., அ.தி.மு.க என யாருடைய ஆலைகள் என்றாலும் அவர்கள் மதுவை வெளி மாநிலங்களுக்கு விற்றுக்கொள்ளட்டும். குறைந்தபட்சமாக 'தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு மதுவைக்கூட விற்கமாட்டோம்' என்று இவ்விரண்டு கட்சிகளைச் சேர்ந்த மது ஆலை உரிமையாளர்களும் அறிவிக்க வேண்டும்.''

விகடன் பைட்ஸ்: `புதிய பாதை' சிக்கல்கள்... `காதல்' உருவான கதை!
வேல்முருகன் - கோபண்ணா
வேல்முருகன் - கோபண்ணா

கோபண்ணா (காங்கிரஸ்)

''மதுக் கடைகளை மூடினால், ஆலைகளும் தானாகவே மூடிவிடும். தி.மு.க-வினர் ஆலைகள் என்பதால், கொள்முதல் ஆர்டர் கொடுக்காமலா இருக்கிறார்கள்? அ.தி.மு.க ஆட்சியில்தான் தி.மு.க-வினரின் மது ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஆக, இதிலெல்லாம் இவர்கள் கட்சிப் பாகுபாடு பார்ப்பது இல்லை.”

தமிழ்நாட்டில், மதுவை அறிமுகப்படுத்திய பெருமை தி.மு.க-வுக்கு உண்டு. ஆனாலும் ‘கூட்டணி தர்மம்’ பலரது வாயை மூட வைத்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது!

அடுத்த கட்டுரைக்கு