Published:Updated:

மீண்டும் கிளம்பிய `ஜெய் பீம்’ சர்ச்சை... வழக்கு பதிவும் பின்னணியும்!

ஜெய் பீம்

‘ஜெய் பீம்’ திரைப்படம் தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்திருக்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா, இயக்குநர் த.செ.ஞானவேல் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் கிளம்பிய `ஜெய் பீம்’ சர்ச்சை... வழக்கு பதிவும் பின்னணியும்!

‘ஜெய் பீம்’ திரைப்படம் தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்திருக்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா, இயக்குநர் த.செ.ஞானவேல் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
ஜெய் பீம்

ஓர் உண்மைக் கதையை மையமாகவைத்து சூர்யா நடிப்பில் உருவாக்கப்பட்ட `ஜெய் பீம்’ திரைப்படம், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. எளிய மக்கள் மீது காவல்துறை நிகழ்த்திய அடக்குமுறைகள் குறித்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்தநிலையில், பெரும் சர்ச்சையும் எழுந்தது.

படத்தின் நாயகி லிஜோமோல், சூர்யா
படத்தின் நாயகி லிஜோமோல், சூர்யா

`ஜெய் பீம்’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் வன்னியர் சங்கத்தின் அடையாளம் இடம்பெற்றதாகச் சர்ச்சை கிளம்பியது. அதையடுத்து, அந்தக் காட்சி மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில், பா.ம.க-வின் இளைஞரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், திறந்த மடல் ஒன்றை சூர்யாவுக்கு எழுதியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில், “ஜெய் பீம் திரைப்படம், தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் மத்தியில் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகச் செய்திகள்வருகின்றன. இந்தத் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் எந்த அளவுக்கு திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆயிரக்கணக்கான மக்களும் இளைஞர்களும் என்னிடம் தெரிவித்துவருகின்றனர்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

படைப்பாளிகளைவிட அவர்களுக்கு வாழ்க்கை அளிக்கும் ரசிகர்கள்தான் பெரியவர்கள். இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால் அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும். இவை எதுவுமே தேவையில்லை. கலைக்கும், உங்களின் படைப்புக்கும் நீங்கள் நேர்மையானவராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் உங்களை நோக்கி மேலே எழுப்பப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன். அதுதான் மக்களின் கோபத்தைத் தணிக்கும்” என்று அன்புமணி குறிப்பிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு, ‘படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்’ என்ற வேண்டுகோளுடன் அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில் அளித்திருந்தார். அதன் பிறகும் `ஜெய் பீம்’ படம் தொடர்பான சர்ச்சை அடங்கவில்லை.

அந்த நிலையில், சாதி, மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் `ஜெய் பீம்’ படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ருத்ர வன்னியர் சேனா என்ற ஓர் அமைப்பு, `ஜெய் பீம்’ படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோர் மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

ஜெய்பீம் படத்தில் நடித்தவர்கள்
ஜெய்பீம் படத்தில் நடித்தவர்கள்

அதைத் தொடர்ந்து, ருத்ர வன்னியர் சேனா அமைப்யைச் சேர்ந்த சந்தோஷ் நாயகர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “சூர்யா நடித்துள்ள `ஜெய் பீம்’ படத்தில் தேச ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலும், தேசப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், சாதி, மதக் கலவரத்தை உருவாக்கும் வகையிலும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்து வன்னியர் சமூக மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும், அவர்களை இழிவுபடுத்தியும், பிற மக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

எனவே, `ஜெய் பீம்’ படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் த.செ.ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும” என்று அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.

சூர்யா
சூர்யா

அந்த மனுவை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், 2021-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி அளிக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிவுசெய்து, முதல் தகவல் அறிக்கையை மே 20-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டது. அதையடுத்து, நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால், `ஜெய் பீம்’ திரைப்படம் குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism