Published:Updated:

`கும்பகர்ணன்போல் தூங்குகிறது இந்த அரசு; நாங்கள்தான் தட்டி எழுப்புகிறோம்" - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

"உலகத்திலேயே சூதாட்டத்துக்கு கருத்துக்கேட்பு கூட்டம் எங்காவது நடந்தது உண்டா?" என்று கேள்வியை எழுப்பினார் எடப்பாடி பழனிசாமி

கோவையில் அதிமுக கட்சிப் பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிறகு கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ``கோவை வெள்ளலூர் புதிய பேருந்து நிலையம் இடம் மாற்றப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அதிமுக சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். கோவை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் செலவில் 500 பணிகள் அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டன. அதை திமுக அரசு முடக்கிவிட்டது” எனக் குற்றம்சாட்டினார்.

`கும்பகர்ணன்போல் தூங்குகிறது இந்த அரசு; நாங்கள்தான் தட்டி எழுப்புகிறோம்" - எடப்பாடி பழனிசாமி

மேலும், ``இரண்டு ஆண்டுக்காலமாக கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களின் மேல் சுமார் 52 சதவிகித மின் கட்டண உயர்வைத் திணிப்பதைக் கைவிட வேண்டும். அதேபோல் சொத்து வரி உயர்வையும் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். திமுக 2021 தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியத் திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போதைப்பொருள் தாராளமாக தமிழ்நாட்டில் கிடைக்கிறது. போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. திமுக அரசு அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகத்திலேயே சூதாட்டத்துக்கு கருத்துக்கேட்பு கூட்டம் எங்காவது நடந்தது உண்டா... ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய சட்டம் இயற்றாமல் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்.

`கும்பகர்ணன்போல் தூங்குகிறது இந்த அரசு; நாங்கள்தான் தட்டி எழுப்புகிறோம்" - எடப்பாடி பழனிசாமி

கும்பகர்ணன்போல் இந்த அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு முறையும் தட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி திமுக-வில் இணைந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ``ஆறுக்குட்டியை நம்பி அதிமுக இல்லை, ஒன்றரைக் கோடி தொண்டர்களை நம்பித்தான் அதிமுக செயல்பட்டுக்கொண்டிருக்கும். வேடந்தாங்கல் பறவைபோல காலத்துக்கு ஏற்ப ஆறுக்குட்டி செயல்பட்டிருக்கிறார்" என்று காட்டமாக பதிலளித்தார் எடப்பாடி பழனிசாமி.